பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. ளையர். திருவள்ளுவமாலை யுரையோடு பரிமேலழகர் உரையை முதன்முதல் அச்சிட்டு வெளியிட்டவர் செந்த மிழ்க் கடலாகிய நல்லூர் ஆறுமுகநாவலர். சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம். சுந்தரமூர்த்தி நாயனார் சைவசமய குரவர் நால்வருள் ஒருவர். கைலாசத்திலே சிவபெருமானது அடியார்களும் ளொருவராய் ஆலாலசுந்தரரென்னும் பெயரோடிருந்து உமாதேவியாரது சேடியர்கள் மீது மோகித்த காரணத் தாற் பூலோகத்திலே, திருமுனைப்பாடி நாட்டிலே திரு நாவலூரிலே சடையனாருக்கு இசைஞானியார் வயிற்றிலே அவதரித்தவர். அச்சேடியர்களும் பரவையார் சங்கிலி யார் என்னும் பெயரோடு முறையே திருவாரூரிலும் திரு வொற்றியூரிலும் அவதரித்தார்கள். ஆலாலசுந்தரர் கை லாசத்தை விட்டு நீங்குமுன் மனம் பரிதபித்தழக் கண்ட சிவபெருமான் கருணை கூர்ந்து "பூலோகத்திலுன்னை வந் தாட்கொள்வோம் என்ற நுக்கிரகித்தபடியே சுந்தரமூர்த் திநாயனார் மணப்பருவத்தை யடைந்து மணக்கோலத்து டன் மணப்பந்தரின் கீழிருக்குஞ் சமயத்தில் அச்சிவ பிரான் ஒரு கிழப்பிராமண வடிவங்கொண்டு ஒரு முறி யோலையோடவ்விடத்தை யடைந்து நாயனாரைத் தமக்கு அடிமையென அச்சபையிலுள்ளோர் ஒப்புமாறு நாட்டி, மணம்புகவொட்டாமற் றடுத்து அழைத்துப்போய்த் தம் மை இன்னரென்றுணருமாறு மறைந்தருளினர். அப் பொழுது நாயனார் பூர்வ வாசனையாற் சிவபத்தி மேலிடப் பெற்று அன்று முதல் அன்புமயமான அற்புத ஞானப்பா டல்களைப் பாடிச் சிவஸ்தலங்கள்தோறுஞ் சென்று வண ங்கிவருவாராயினர். தமது பிறவிக்குக் காரணமாகிய பெண் ணவாவின் பயன் வந்து கூடுங்காலம் வந்தடுக்க, திருவா ரூரிலே சுவாமி தரிசனஞ் செய்து மீள்பவர் ஊழ்வலியாலே 13