பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை. ஈமிழ்மொழி ஒரு கோடியே எண்பது லட்சம் மக்களால் 2வழங்கப்படுவது. மொழியெனினும் பாஷையெனி னும் ஒக்கும். பாஷைகள் உலகத்தில் ஆயிரக்கணக்காக வுள்ளன. அவை மூலபாஷையென்றும் பிராகிருத பாஷை யென்றும், மிசிரபாஷையென்றும், அவப்பிரஞ்சம் என்றும் பலபகுதிப்படும். அவற்றுள் மூலபாஷைதான் வேறுபா ஷையிற்றோன்றாது தன்பாற் பலபாஷைகளும் தோன்று தற்குக் காரணமாகவுள்ளது. பிராகிருதம் ஒரு மூலபா ஷையினின்றும் சிதைவாக வழங்குவது. மிசிரபாஷை இரண்டும் பலவும் ஆகிய மொழிகள் கலந்து ஒருமொழி யாகி வழங்குவது. அவப்பிரஞ்சம் தனக்கு எழுத்துக் களும் இலக்கணமும் இன்றிக்கிடந்து வழங்குவது. இவ்வகுப்பில் தமிழ்மொழி எதிலடங்குமெனின், மூல பாஷையில் அடங்குமென்க தமிழும் சமஸ்கிருதமாகிய வடமொழியும் ஆதியிற் சிவபெருமானால் அருளிச்செய்யப் பட்ட மொழிகளாம். தமிழிலேயுள்ள அட்சரங்களுள் மூன்று தவிர மற்றையெழுத்துக்களெல்லாம் வடமொழியின் லும் உண்டன்றோ, ஆதலால் தமிழைத்தனிமொழியென் பது எவ்வாறெனின், அற்றன்று. ஒரு பாஷையிலுள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றப்பாஷைகளெல்லாவற் றிலும் உண்டன்றோ . வரிவடிவு மாத்திரம் பாஷைகள் தோறும் வேறுபட்டிருக்கும். ஒலிவடிவால் பெரும்பாலும் சமமேயாம். ஒவ்வொரு பாஷைக்கும் இரண்டு மூன்றே சிறப்பெழுத்துக்களாக வுள்ளன. மற்றை யெழுத்துக்க ளெல்லாம் பொது. ஆதலால் எழுத்தொப்புமை ஒரு