பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி யிலிருந்து வந்தமைக்குக் காரணமாகாது. தமிழி லேயுள்ள எழுத்துக்கள் ஒன்றோடொன்று கூடிநிற்கும் முறையும் வேறு. வடமொழியிலேயுள்ள எழுத்துக்கள் தம்முள் ஒன்றோடொன்று கூடிநிற்கும் முறையும் வேறு. திணை பால் வேற்றுமைகளைக் குறிக்கும் குறிகளும் வேறு. இவை முதலிய ஏதுக்களாலும் தமிழ் தனிமொழியென் பது நன்கு துணியப்படும். தமிழிலே வடமொழிக்கலப்பு மிகவுண்டென்பது உண்மையே. பண்டைக்காலத்தில் நூலாசிரியர்களெல்லாம் வடமொழிச் சொற்களைப்பெரி தும் எடுத்து வழங்கினாரில்லை. அகத்திய தொல்காப்பிய சூத்திரங்களை நோக்கும் பொழுது அக்காலத்தில் வடமொ ழிக்கலப்பு மிகச்சிறி தாம். என்பது நன்கு புலப்படும். அவற்றிற்குப்பின்னர் வந்த நூல்களிலே வடமொழிக்கலப் புக்காலந்தோறும் அதிகரிப்பனவாயிற்று. அவற்றுள்ளும் பிற்காலத்தார் செய்த நூல்களிலே வடமொழிச்சொற்கள் பரந்து கிடப்பது பிரத்தியட்சமாம். வடமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கள் அனேகசொற்களைத்தற் பவமாகவும் தற்சமமாகவும் எடுத்து வழங்குவாராயினர். வடமொழிச் சொற்களுக்குத் தமிழிலே பிரதிபதங்கள் உள வாக வும் அவற்றை எடுத்து வழங்காது எ துகை மோனை முதலிய தொடைநயங்கருதி அப்ப தங்களையே எடுத்து வழங்குவாரா யினர். இதுவே வடமொழிச்சொற்கள் தமி ழில் வந்து மிகுதியாக வழங்குதற்குக் காரணமாம் அது நிற்க. தமிழ்மொழி எந்தக் காலத்தே தோன்றிற்று என்று கால வரையறை செய்தல் யாவருக்கும் அரிதாம். அது தமிழ்நிலத்து மக்கள் என்றுளரோ அன்றுள தாம். அது நெடுங்காலம் இலக்கண வரம்பு சிறந்தில்லாத ஒரு மொழி யாகக்கிடந்தது. அதற்கு இலக்கண வரம்பு செய்தார் சிவ பெருமானென்பது 'இருமொழிக்குங்கண்ணுதலார் முதற்