பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 குரவர்' என்பதனால் இனிது புலப்படும். வடமொழிக்கு ஆதியிலக்கணமாக மாகேசுவர சூத்திரத்தையும், தமிழு க்கு இசை நுணுக்கத்தையும் சிவபெருமான் இமையத்தி லே கைலாசகிரியிலேயிருந்து அருளிச்செய்தார். இக்கரு த்துப்பற்றியே வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தில் வரந்தரு வாரும் தமிழ் வரலாற்றை ஒருவாறு கூறுமுகத்தான். 'பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலேயிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பா வை மருங்கிலே வளரு கின்றாள்." என்று கூறினர். இங்கே பொருப்பென்றது இமையத்தை யெ னக்கொள்க. அவ்விசை நுணுக்கத்தை ஆதாரமாகக் கொ ண்டு குமாரக்கடவுள் தம் பெயரால் ஓரிலக்கணஞ் செய்தரு ளினர். அதுவே அகஸ்தியர் வருதற்கு முன்னுள்ள இலக்கண நூல்போலும். அக்காலத்திலே தமிழ் இயல் இசை நாடக மென முப்பாற்பட்டிருந்ததாதல் வேண்டும். அது பற்றியே அகஸ்தியர் முத்தமிழுக்கும் இலக்கணஞ் செய்வாராயினர். அதினின்றும் இயற்றமிழை வேறுபிரித்து அதற்குத்தொல் காப்பியர் முதலாயினோர் இலக்கணஞ் செய்தனர். இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் வேறு வேறு பிரித்து ஏனை யோரும் நூல் செய்தனர். அகஸ்தியர் வருதற்குமுன்னே தமிழ்மக்கள் அற்ப வாழ்க்கையையுடையராயிருந்தும் தமிழ்மொழியை இயல் இசை நாடகமென மூன்று பகுதியினை யுடையதாகப் பிரித் தமையைநோக்குமிடத்து அவர் தம்மள வில் நாகரிகத்தாற் குறைந் தாரல்லர் என்பது நன்கு து ணியப்படும். சாதா ரண விஸ்வகாரணங்களுக்கு இயற்றமிழையும், மனம் விஷ யங்களின் நீக்கிச் சாந்தப்பட்டு மகிழ்ச்சி கொண்டவிடத்து