பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தென்மொழிவரலாறு. நா லூறே ஒருகாலத்தில் தொகுக்கப்பட்டன. எஞ்சியன சிதைந்தனவென்பர். அம்முனிவர் பாண்டியன் சமஸ்தா னத்தை விட்டகன்றபோது ஒவ்வொருவரும் ஒவ்வோரே ட்டில் ஒவ்வொரு செய்யுள் எழுதி வைத்து நீங்கினரென் றும், அவர் நீங்கிய பின்னர் அம்மடத்தைச் சுத்திசெய்யப் புகுந்தோர் அவ்வேடுகளைத் திரட்டிக் கொண்டுபோய்ப் பாண்டியனுக்குக் காட்ட, அவன் அவைகளுட்சிலவற்றை வாசிக்கக் கேட்டுத் தன்னை முன்னிலையாகக் கொண்டு பாடியிருப்பக் கண்டு; நங்குற்றங்களையெடுத்துக் கூறி னர்போலும் " என்றையுற்று அவைகளை வைகை யிலிடக் கட்டளையிட்டான் என்றும், இட்டபோது நா நூறுசெய் யுட்கள் நீரோடுமுக மாய்ச் செல்லாது எதிர்முகமாக நா லடித் தாரஞ் சென் றன வென்றும் அவற்றைத் திரட்டி அக்காரணத்தால் அதற்கு நாலடி.யாரெனப் பெயரிட்டு வழங்குவித்தானென்றும் ஒருசாரார் கூறுவர். நாலடியார் இன் ன து செய்ய இன்ன து பயன் எனச் சிறிது விரித்து நான்கடி வெண்பா வாற் கூறுவது. அது வும் திருக்குறள் போல நீதிகளைக் கேட்போர் மனத்தே பதியச் சொல்லும் சிறப்புடைபையால் திருக்குறளுக்கு இரண்டாவதாக மதிக்கப்படுவது. அது பற்றியே "ஆலும் வேலும் பல்லுக்குறுதி நா லுமிரண்டுஞ் சொல்லுக்குறுதி" என்றும் ஆன்றோர் பாராட்டு வர். இறையனாரகப்பொருள். கடைச்சங்கத்திறுதிக் காலத்திலே பாண்டிநாட்டிற் பன்னிரண்டு வருடம் மழைபெய்யா தொழிந்தது. அது கண்டு அரசன் புலவர்களையெல்லாம் அழைத்து எனது நாடு பெரிதும் வருந்துகின்றது. ஆதலால் நீவிர் வேற்று நாட்டிற் சென்று காலங்கழித்து நமது நாடு செழித்த பின் வருகவென்று அவர்களை அனுப்பிவிட்டான். அவர்க