பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு 109 ளும் அவ்வாறு சென்று நாடு செழித்த பின் மீண்டு வந்து கூடினர். அப்பொழுது பொருளதிகாரம் வல்லார் மாத்தி ரம் இல்லாமல் சங்கம் நடைபெறுவதாயிற்று. அக்காலத் தில் அச்சங்கத்தார்க்கு நூலா யிருந்த பொருளதிகார மும் அகப்படாதொழிந்தது போலும். அது கண்டு அர சன் ஆலவாயின விர்சடைக் கடவுள் பாற் சென்று தனது குறையைக் கூறித் தவம் கிடந்தான். அதுகண்டு இரங்கி எம்பெருமான் செப்பேட்டில் அறுபது சூத்திரங்களை எழுதிப் பீடத்தின் கீழிட்டார். அதனை ஆசாரியர் எடுத் துப்போய் அரசனிடம் கொடுத்தார். அரசன் அதனை ஏற்றுப் பேரானந்த மடைந்து சுவாமியைப் பன்முறை வணங்கித் தோத்திரஞ்செய்து அச்செப்பேட்டைச் சிர மிசைத் தாங்கிப் போய்ச் சங்கத்தாரிடங் கொடுத்தான். இதுவே இறையனாரகப்பொருளெனப்படுவது. இதற்குச் சங்கத்தாரெல்லாந் தனித்தனி ஒவ்வோருரை செய்தனர். உருத்திரசன்மர் நக்கீரருரையை மாத்திரம் அங்கீகரித்து மற்றோர் செய்த உரைகளையெல்லாம் நிராகரித்தனர். ஆத லின் இந்த நூலுக்கு நக்கீரர் செய்தவுரையே வாய்ப்புடை யதாயிற்று. இவ்வுரை மிக்க திட்பமும் நுட்பமும் உடை யதாய்க் கேட்போருக்கு அற்புத ஆனந்தம் பயப்பதொ ன்றாம். ஒவ்வொரு விஷயங்களை யு மெடுத்துப் பல்வகை ஆட்சேபங்களையுமெழுப்பி அவற்றுக்கெல்லாம் சமாதா னங்கூறி முடிவில் உண்மைப் பொருளை எடுத்துச் சித்தா ந்தஞ் செய்வதில் நக்கீரருக்கிணையாவார் முன்னும் பிறந் திலர் பின்னும் பிறந்திலர். செந்தமிழமிர் தின் சுவையை யும் அக்காலத்துப் புலவர்கள் உரைசெய்யும் ஆற்றலையும் முறையையும் உணர விரும்பும் வித்தியா வினோதங்கள் இவ்விறையனாரகப் பொருளுரையைத் தப்பாது ஆராய் தல் வேண்டும், - ?