பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 117 பாருஞ் சிலராயினர். சித்தாந்தவுண்மையையும் சிவபத்தி சுப்பிரமணிய பத்திகளையும் இந் நூல் தரத்தக்கது. ஆத லால் இந்நூலை யாவரும் போற்றி யோ1 து தல் வேண்டும். கச்சியப்ப சிவாசாரியருடைய புலமைத் திறம் மேல்வருஞ் செய்யுளால் இனிது வரப்படும். "இரவி கம் மியன் சுட்டுறு கோல்கதி ரெரிதீ மருவு செந்தரை பொறிமணிகொள் களம்வறுங்கான் கரிக ளேகரிகாற்குழ றுதிக்கை நீர் கானல் புரி தரும்பணி வெந்திடும் பணிக்குலம் போலும் இவருடைய சித்தாந்த சாத்திர வன்மையும் மேல்வருஞ் செய்யுளாற் பெறப்படும். பாசங்கொண் டாவி .பலவும் பிணிப்போனும் நேசங்கொண் டாங்க தனை நீக்கியருள் செய்வோனும் ஈசன் சிவனென் றியம் புமறை நீ யிழைத்த வாசொன்று மித்தீமையார் தவிர்க்க வல்லாரே" ஒட்டக்கூத்தர். ஆயிரத்திருபது வருஷங்களுக்கு முன்னே குலோத் துங்கசோழன் சமஸ்தானத்திலே விளங்கிய ஒரு தமிழ்ப் புலவர். இவர் பாடிய ராமாயணத்தில் உத்தரகாண்டம் மாத்திரமே சர் வாங்கீகாரமாகிக் கம்பராமாயணத்தோடு சேர்க்கப்பட்டது இவர் ஜாதியிற் கைக்கோளர். புகழேந்தி ஒட்டக்கூத்தன் காலத்திலே பாண்டியன் சமஸ்தானத்து வித்துவானாக விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் செய்த நூல்கள் நள வெண்பா முதலியன. வெண்பாப் பாடுவதில்