உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தேன்மொழிவரலாறு. இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவருடைய கவித்திறமையைக் கண்ட ஒட்டக்கூத்தன் அவருக்குப் பல துன்பங்கள் செய்யப் புகுந்தும் ஈற் றில் அவருடைய இனிய குணங்களினால் அவரோடு கலந்து நண்பனாயினான். காளமேக கவி. ஸ்ரீரங்கத்திலே வைஷ்ணவப் பிராமணராக அவ தரித்த இவர், சம்புகேசுரத்திலே ஒரு தாசிவலையிலகப் பட்டு, அவள் பொருட்டாக அங்குச் சென்று கோயிலி னுட்பிராகாரத்திலே அவள் வரவை எதிர்நோக்கி இருக் கையில் நித்திரை வர அங்கே படுத்து நித்திரை போயினார். தாசி இவரைத்தேடிப் பார்த்துக் காணாமையால் தன்வீடு போய்ச் சேர்ந்தாள். அதன் பின்னர்க் கோயிலும் திருக்காப் பிடப்பட்டது. அப்பொழுது அந்தப் பிராகாரத்திலொரு பக்கத்தில் சரஸ்வதியை நோக்கி ஓரந்தணன் தவங்கிடந் தான். சரஸ்வதி அதற்கிரங்கிப் பிரசன்னராகித் தமது தம்பலத்தை அந்தணன் வாயிலுமிழப்போக அவன் அதை அது சிதமென்று வாங்காது மறுத்தான். அதுகண்ட சரஸ்வதி அத் தம்பலத்தோடு வைஷ்ணவன் கிடந்த இடத்தை யடைந்து அவனை யெழுப்பித் தம்பலத்தை நாவினாற் கொடுக்க வைஷ்ணவன் தன் தாசியே தம்பலங் கொணர்ந் தாளென்றெண்ணி அதனை நா வினாலேற்றான். அவ்வள வில் சரஸ்வதி மறைந்து போக, வைஷ்ணவன் அதனை யேற்ற மாத்திரத்தில் சகலகலைகளும் வல்லபண்டித னாகிச் சூற்கொண்ட காளமேகம்போலத் தமிழ்க்க விமாரி பொழியத் தொடங்கினான். அன்றுமுதல் அவனுக்குக் காளமேகமென்னும் பெயருண்டாவதாயிற்று. இவன் திருமலைராயனென் னும் அரசன் சமஸ் தான வித்துவா னாகிய அதிமதுரகவிராயனுக்கு மாறாகி அவ்வரசன் சபை யிலே இருந்த புலவர்களெல்லோரும் பிரமிக்கும்படியாக