பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 119 யமகண்ட விதானப்படி ஆசு கவிகள் பொழிந்தவன். இவன் கா லம் சா விவாகன வருஷம் ஆயிரத்திரு நூறு: அதிமதுரகவிராயன் காளமேகப்புலவருடைய வாக் குவன்மையறியாது தனது ஆற்றலையெடுத்து அவருக்கு முன்னே கூறிய கவிவருமாறு:- மூச்சு விடுமுன்னே முந்துற நானூறும். ஆச்சென்றா லைஞ் தாறு மா கா தா -பேச்சென் ன வெள்ளைக்கவி காள மேகனே யுன்னுடைய கள்ளக் கவிக்கடையைக் கட்டு. அதற்குக் காளமேகம் சொன்ன எதிர்க்கவி வருமாறு:--- இம்மென் னு முன்னே யெழு நூறு மெண் ணூ றும் அம்மென்றா லா யிரம் பாட் டாகா தா - சும்மா இருந்தா லிருப்பே னெழுந் தேனே யானால் பெருந் தாரை மேகம் பிளாய். அதிமதுரகவி காளமேகப்புலவருடைய வரலாற்றையறிந்து வருமாறு விடுத்த தூதனுக்குக் காள மேகஞ்சொன்ன கவி வருமாறு:- "தூதைந்து நாழிகை யி லாற நாழிகை தனிற் சொற் சந்தமாலை சொல்லத், துகள் வந்தா தியேழுநாழிகை தனிற் றொகைபட விரித்துரைக்கப் - பாதஞ்செய் மடல்கோ வை பத்து நாழிகை தனிற் பரணியொரு நாண் முழுதுமே, பாரகா வியமெலா மோரிரு தினத் திலே பகரக்கொடிக்கட்டினேன் - சீதஞ்செயுந் திங் கள் மரபினானீ டுபுகழ் செய்யாதிரு மலைராயன்முன், சீறுமா றாகவே தாறுமாறுகள் சொற் றிருட்டுக்கவிப் புலவரைக்- கா தங்கறுத்துச் செருப்பிட்டடித்துக் கதுப்பிற் புடைத்து வெற்றிக், கல்லணை யினொடு கொடிய கடிவாளமிட்டேறு கவி காளமேகநர்னே.