பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தென்மொழி வரலாறு. ஆசுகவிகள் பாடுவதில் இவருக்கிணையாவார் ஒருவருமிலர். இவர் பாடிய தனிச்செய்யுள்கள் அனேகம். இவர் வேறு பெரு நூல் செய்ததாகக் காணப்படவில்லை. சரசுவதியர் தாதி மாத்திரம் இவர் பெயரால் வழங்குகின்றது. அவ் வந்தாதியும் திருமலைராயன் சமுகத்திலே இவர் சென்ற போது, அவன் சமாசனங் கொடுக்கா து அவமானஞ் செய்தமையால் அந்நிலையிலே நின்று சர சுவாதியை நோக்கி கித், தமக்குச் சமாசனம் தரும்படி அருள் புரியுமாறு பாடப்பட்டது. காப்புச் செய்யுள் பாடியவுடனே அவருக் குச் சமாசனம் கிடைப்பதாயிற்று. அச்செய்யுள் வரு மாற:-- "வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை அரியாசனத்தி னரசரோ டென்னைச் சரியா சனத்து வைத்த தாய். இரட்டையர். ஒருவர் அத்தகராகவும் மற்றவர் முடவராகவும் பிறந்த சகோதரராகிய புலவர் இருவர் இப்பெயர் பெறுவர் இவர்கள் காஞ்சிபுரத்திற் பிறந்து தமிழ்க்கல்வி யில் மிக்க வல்லவராகி முடவரை அந்தகர் தோள் மேல் ஏற்றிக் கொண்டு முடவர் வழிகாட்ட ஊர் கடோறுஞ் சென்று கவிபாடிப் பெருங்கீர்த்தி பெற்றவர் கள். இவர்கள் செய்த நூல்கள் தைவீகவுலா தில்லைக்க லம்பகம், கச்சிக்கலம் பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலியன. இப்புல் வர்களே நானுமறியேன் அவளும் பொய்சொல்லாள் என் னும் பழமொழியை வெளிப்படுத்தித் தா மாராயாத விஷயங்களை யும் சரஸ்வதி அருளால் செய்யுள் வாயிலாக ஆங்காங்கும் வெளியிட்டு வந்தவர்கள். திருவாமாத்