பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 123 சந்தமும் உடையது. இதன் முற்பகுதி சிற்றின் பரசம் தேங்கப்பெற்றுள்ளது. பெரும்பாலும் ஒவ்வொரு செய் யுளும் அணியிலக்கண மமையப் பாடப்பட்டன. இந் நூலுக்குத் திருத் த ணகைச் சரவணப்பெருமாளையர் சிறந்தவுரையொன்று எழுதியிருக்கின்றனர். காசிகாண் டம், இரண்டாயிரத்திருநூற்றறுபத்தைந்து செய்யு ளுடையது. லிங்க புராணம், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. கூர்ம புராணம் வடமொழியில் லிருந்து மூவாயிரத்தெழுநூற்றுப்பதினேழு செய்யுளாற் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. கொக்கோகம் வட மொழியிலுள்ள மதன நூலின் மொழிபெயர்ப்பு. இது ஆறு காண்டமும் முந்நூற்று முப்பத்தைந்து செய்யுட்களு முடையது. அதிவீரராம பாண்டியர் வாய்ந்தமின்னை மடந்தை. யராக்கிவிண் - போந் திடாமலன்றோ மலர்ப்புங்கவன் - சாந் தமூழ்குதமனியப் பொற்பென --வேந்து வெம் முலைப்பார மியற்றினான். என்ற நைடத செய்யுளை யரங்கேற்றும் போது, சபையிலிருந்த ஒரு புலவர் "மின்னறகொடியிலே தமனியப்பொற்பை வைத்த தெப்படியென்று ஆட்சே பிக்க, அதற்கு வகை சொல்ல வியலாது அதிவீரராம பாண்டியர் 'நாளை க்குச் சமாதானம் கூறுவோமென்று சொல்லிப்போய்த் தமது தேவியிடம் நிகழ்ந்ததைக் கூற, அத்தேவியார் தனக்காம்பென்னும் ஆணி பயினால் இறுக் கப்பட்டிருக்கின்ற " தென்று கூற, அது கேட்ட அதி வீரராமபாண்டியர் மகிழ்ந்து மற்றைநாள் , அச்சமா தானத்தையே சென்று கூறினர். ஆட்சேபித்த புலவரும் சபையோர்களும் மகிழ்ந்து பாராட்டினர். வரதுங்கராமபாண்டியர். இவர் அதிவீரராம பாண்டியரின் சகோதரர். இவர் பாடிய நூல் பிரமோத்தரகாண்டம். இது வடமொழியில்