பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 8 •4 130 தென்மொழி வரலாறு. நிராகரணம், வினாவெண்பா, கொடிக்கவி , போற்றிப்பஃறொ டை, சிவப்பிரகாசம், நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக் கம், என்னும் இவ்வெட்டும் உமாபதி சிவாசாரியர் செய்தன. உண்மைவிளக்கஞ் செய்தவர் திருவதிகை மன வாசகங் கடந்தார். சிவஞான சித்தியும் இருபா விருபஃதும் செய் தவர் அருணந்தி சிவாசாரியர். சிவஞானபோதஞ் செய்த வர் மெய்கண்ட தேவர். திருவுந்தியார் செய்தவர் உய்ய வந்ததேவநாயனார். திருக்களிற்றுப்படியார் செய்தவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாய னார். இவர் திருவுந்தி யார் செய்தவருடைய சீடர். இச்சித்தாந்த சாஸ்திரங் கள் பதினான்கும்சிவாகமத்தின் ஞான காண் டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்குந் தமிழ் நூல்களாம். இவை ஐஞ் நூற்றெண்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே பாடியரு ளப்பட்டன வென்பது சங்கற்ப நிராகரணஞ் செய்த உமா பதி சிவாசாரியர் தாமே அந்நூலிலே சாலிவாகன வருஷம் ஆயிரத் திருநூற்று முப்பத்தைந்தில் அதனைச் செய்ததாகக் கூ றலால் நிச்சயிக்கப்படும் உமாபதிசிவாசாரியர் அருணந்தி சிவாசாரியார் சீடர். அருணந்தி மெய்கண்ட சிவாசாரியரது சீடர். சிவஞான போதஞ் செய்யப்பட்ட சாலம்சா லிவாகன சகவருஷம் ஆயிரத்தரு நூ றள விலுள் ளது. உமாபதி சிவா சாயராற் பாடப்பட்ட சேக்கிழார் எழு நூற்றெழுபது வரு ஷங்களுக்கு முன்னுள்ள வர். வேதத்தின் ஞான காண்டப் பொருளையுள்ளபடியறிவிக்குந் தமிழ் நூல்கள் தேவாரமுந் திருவாசகமுமாம். இவையிரண்டும் தமிழ் வேதமெனப்படும். இச்சித் தாந்தசாத்திரங்கள் தமிழிலே வெளிவருதற்குமுன் னுள்ள காலத்திலே பக்குவர்கள் குருவைத் தேடியடைந்து உபதேசமுகமாகச் சமையவறிவைப் பெற்றுக் கொள்வார் கள். இக்காலத்திலோ நூல்களே யாவர்க்கும் குருவாயின. ஆகியும் உண்மையறிவு தலைப்பட்டார் மிகச் சிலரே. அக் காலத்தில் அறியாதார் பலர். இக்காலத்தில் அறிந்து மறி யாதாரே பலர்.