பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 131 சிவஞானபோதம். இது வடமொழியிலே நந்திபகவானாலும் தமிழிலே மெய்கண்டதேவராலுஞ் செய்யப்பட்டது. தமிழ்ச்சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதனூலாகவுள்ள து. பன்னிரண்டு சூத்திரங்களையுடையது. இதற்குச் சிவ ஞான முனிவர் பாஷியமுஞ் சிற்றுரையுஞ் செய்தனர் சிவ ஞானமுனிவர் வடமொழியிலே சிவாக்கிரயோகிகள் செய்த பாஷியத்தையே மொழிபெயர்த்தனர். வேதம் பசுவதன் பான் மெய்யா - கமநால்வ ரோதுந் தமிழ் வேதமுள்ளுறு நெய் - போதமிகு -நெய்யினுறு சுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான் - செய்த தமிழ் நூலின் நிறம்' என்னும் ஆன்றோர் வாக்கே சிவஞானபோதத்தின் மாட்சிமையைத் தெரிவிக்கும். சிவஞான சித்தி. அருணந்தி சிவாசாரியர் செய்த பதிசாத்திரம். அது சைவசித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கனுளொன்று. அது சிவஞானபோதத்திற்கு வழி நூல். அது பரபக்ஷம் சுப பக்ஷம் என இருபக்ஷங்களையுடையது. பதி பசு பாச வியல்புகளை ஐயந்திரி பறத்தடைவிடைகளால் விளக்கு வது. இது பௌத்தம் லோகாயதமுதலிய சமயங்களைக் கண்டித்துச் சுவபக்கம். நாட்டுவது. ஆன் மவிசாரணை செய்யப்புகுவார்க்கு இது போலச் சிறந்த நூல் மற்றில்லை, அதற்கு மறைஞான சம்பந்தர் சிவாக்கிரயோகிகள் முதலி யோர் உரை செய்தார்கள். சேக்கிழார். தொண்டை நாட்டிலே குன்றத்தூரிலே செக்கிழார் மரபில் அவதரித்த அருண்மொழித்தேவர் அவருக்குச்