பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 139 | > 4 - கு. 2. 2. E E செய்யப்பட்டது. இவர் அவ்வுரையைத் தழுவியும் ஓரோரிடத்து மறுத்தும் பதவுரையாகவும் வேண்டிய விடத்துப் பொழிப்புரையாகவும் விசேட வுரையாகவும் இலக்கணமும் மேற்கோளும் எடுத்துக்காட்டி மிக விரி வாக உரை செய்திருக்கின்றார். ஆயினும் இவருடைய உரை சிலப்பதிகாரத்துக்கு முழுதும் அகப்படவில்லை. சிலப்பதிகாரம் இயல் இசை நாடகம் என்னும் முத்தமி ழும் விரவ இயற்றப்பட்டமையால் இதற்கு உரை முத் தமிழும் வல்லோராலன்றி ஏனையோரால் இயற்றுதல் கூடாது. இவர் முத்தமிழும் வல்லவரென்பது இயல் இசை நாடக லக்கணங்களினின்றும் எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் நன்கு புலப்படுகின்றது. இவருடைய கொள்கைகளிற் சிலவற்றை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவதால் இவர் நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர் என்பது ஒருதலை இவர்பதங்களுக்குப் பகுதியெடுத்துக் காட்டிப் பொருள் கூறுவதில் மிகச்ச துரர். பொதியில் என்பதைப் பொது - இல் எனப் பிரித்து உகரவீறு இகர மாய்த் திரிந்து உடம்படுமெய்யும் பெற்று "கிளந்தவல்ல" என்னும் அதிகாரப் புறனடையால் முடிந்தது, என்று இவ்வாறு சொற்களை முடித்துக்காட்டியும் போவர். 'கொன்றையன் சடைமுடி' - ஆகுபெயரான் இறைவன், தாங்கொண்ட பொருளுக்கு இயைய இன்ன பெயர் என்றுங் கூறிப்போ வர். சிலசெய்யுட்களில் அடிசீர் முதலியவற்றில் சந்தேகம் வருமிடத்துச் செய்யுளிலக்கணமு மெடுத்துக் கூறிப்போவர். இப்படிப் பலவகையாலும் தமது ரையை விளக்கமுற எழுதும் இயல்புடையோர். இவர் யாழ்ப் பாணத்தி லரசு செய்த குல்பூஷணசிங்கையாரிய சக்கிர வர்த்திக்கு மந்திரியாக விளங்கின வரென்பதும், அவர் தம் பெயரால் ஒரு பெருந்திருக்குளம் அமைத்தவரென்பதும் அத்திருக்குளம் இன்றும் அவர் பெயரால் வழங்குகின்ற