பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தென்மொழி வரலாறு. தென்பதும், அவர் தொண்டைநாட்டினின்றும் சென்று யாழ்ப்பாணத்திற் குடிகொண்டவரென்பதும், அக்காலம் கண்ணகிக்கு ஆலயங்களும் விழாவணிகளும் சிலப்பதிகார படனமும் வகுக்கப்பட்ட காலம் என்பதும், அதுபற் றியே இவரும் சிலப்பதிகாரத்துக்கு உரை செய்தாரென் பதும் யாழ்ப்பாணச் சரித்திரத்தாலறியக் கிடக்கின்றன. பரஞ்சோதி முனிவர். இவர் மதுரையில் துறவு பூண்டிருந்த ஓரந்தணர். சமஸ்கிருதம் தமிழ் இரண்டும் வல்லவர். சிவனுடைய திருவிளையாடல்களையே யாவருக்கும் எடுத்துக் கூறி ஆனந்த பரவசராயிருப்பர் அவற்றைக் கேட்ட பெரியோர் அவரைப் பணிந்து திருவிளை யாடற் சரித்திரங்களைத் தமி ழிலே பாடித் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்ய, அவ்வாறே நா லுகாண்டமும் அறுபத்தெட்டுப் படலமும் மூவா யிரத்து: முந்நூற்றறுபத்து மூன்று செய் யுளும் உடையதாகப் பாடியருளினர். இவர் ஆகம சாத் திரங்கள் மாத்திரமன்று, தமிழிலே இலக்கிய விலக்கண மெல்லாம் நிரம்பக்கற்ற வல்லுனர் என்பது அவர் பாடல் களால் நன்கு விளங்குகின்றது. நாட்டுச் சிறப்பிலே, மழைவருஷிக்க எழுந்த மேகத் த ைத எடுத்துச் சிறப்பித்துக் கூ ற ம் போது, த ம து மனத்திலே பதிந் துள்ள சிவபெரு மானதும் அம்மையாரதும் திருமேனியின் வண்ணமும், அருள் வண்ணமும் உவமையாக எடுத்துக்கூறிய சிறப்பு மிகவும் வியக்கத்தக்கது. அச்செய்யுள் வருமாறு:- தெய்வ நாய க ளீ றணி மேனிபோற் சென்று பௌவமேய்ந்து மை மேனிபோற் பசந்து பல்லுயிர் எல்வமாற்று வான் சுரந்திடுமின்னருளென்னக் (க்கும் கௌ வை நீர் சுரந்தெழுந்தன கனை குரன் மேகம்.