பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தென்மொழிவரலாறு. கட வுள் கனவிற்றோன் றி அதற்குப் பிரமாணம் நாளைக்குச் சபையிற் காட்டப்படுமென்று அநுக்கிரகித்தருளினார், என்றும் அவ்வாறே மறுநாட்சபையில் ஓரந்தணனாய்க் குமாரக்கடவுள் இந் நூலைக்காட்டி மறைந்தருளினார். என் றும் ஒரு கதையுள து. அதற்குப் பிரமாணம் தொல்காப் பியச் சூத்திரத்தாற் கொள்ளக்கிடக்க, வீரசோழியத் திற் பிரமாணங் காட்டியது மிகையா மாதலாலும், வீர சோழியம் கந்த புராணத்துக்குப் பிற்பட்ட நூ லாதலா லும் அக்கதை நம்பத்தக்க தன் று. இந்நூல் வீரசோழ னாற் செய்விக்கப்பட்டமையின் வீரசோழியம் என்றா யிற்று. குமரகுருபர சுவாமிகள். இவர் பத்து வயதாங்காது மூமைப்பிள்ளையாயிருந்து திருச்செந்தூர் சுப்பிரமணியக்கடவுள் ஆலயத்திலே தந்தை தாயராற் கொண்டுபோய் விடப்பட்டபோது ஊமைத்தன்மை நீங்கி, அற்புதக விப் பிரபந்தங்கள் பாடுஞ் சக்தி பெற்று விளங்கின புலவர். இவரிடத்திலே புலமை யோடு அற்புதங்களும் விளங்கின. இவர் காசியாத்திரைக் கெழுந்து சென்றபோது, வேங்கடகிரிக்குச் சமீபத்திலே வழியருகே யிருந்து துன்பஞ் செய்து வந்த புலியை அழைத்து அதனை வாகனமாகக் கொண்டு சென்று காசி யையடைந்தனர். அதுகேட்ட "ஆக்பா" என்னுந் துருக்க சக்கரவர்த்தி இவரைச் சென்று கண்டு உபசரித் துத் துறவியாதலின் என் மாளிகையிலும் வந்து விருந்து கொண்டருள வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்தான். சுவாமிகள் கொள்வோமென்ன, சக்கரவர்த்தி அதற்கு வேண்டுவன வெல்லாம் அமைத்துத் தன்மதாசாரியர் ஒரு மருங்கிருக்கச் சுவாமிகளைத் தன்னருகே தலைப்பந்தியி லிருத்தினான். மாமிசபதார்த்தங்களோடு கூடியவுணவே