பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தென்மொழி வரலாறு. வென்று வினவ, அவர் அற்றைநாள் அமாவாசை யாகவும் மறவி பற்றிப் பூரணை நாளென்றார். அரசன் சிலேஷார்த்த மாக, “இது மதிகெட்ட தினம்" என்று கூற, பட்டர் அவன் குறிப்பையு ணர்ந்து, தாம் கூறியதைத் தாபிக்க வெண்ணி பூரணை தான் என்று வலியுறுத்துரைத்துச் சூரியாஸ் த மயனவேளை யில் வந்து காட்டுவேனென்று விடைபெற்றுப் பூசைக்குச் சென்றார். அரசனும் அஸ் தமயன காலம் அப்போது வருமென ஆவலோடு காத்திருந்தான். பட்டர் குறித்த நேரத்திலே அரசன் சமுகஞ்செல்ல, இருவரும் உப்பரிகை மேற்சென்று கீழ்த்திசைநோக்கியிருந்தார்கள். இச்சமாசாரத்தைக் கேள்வியுற்ற நகரத்துச் சனங்கள் எல்லோரும் அவ்விடத்திற் சென்று கூடினார்கள். மாலைக்காலமும் வந்தடுத்தது. பட்டர் சர் வாண்டங்களையும் மீன்று காக்கின்ற உலகமா தா தம்மையும் காப்பாளென் னும் பேருறுதியு டையராய் அரசனை நோக்கி, ராஜகெம் பீரா! என் வாக்கு என் வாக்காயிற் பொய்க்கும். என் வாக் கெல்லாம் தே விவாக்கேயாத லின் மெய் வாக்கே பாம். காட்டுவேன் காண்பா யாக வென்று கூறி, அபிராமியம் மையார்மீது அன்புமயமாகிய ஓாந் தாதி பாடத்தொடங் கிப் பத்துக்கவிசொல்ல, பூரணகலையோடு கூடிய தண்ணிய சந்திரன் கீழ்த்திசையிலே யுதித்து யாவருங் கண்டு கண் களிகூர மேலெழுந்தது பட்டர் தாமெடுத்த அந்தாதியை அவ்வளவிலே நிறுத்தாமலும் மனம் பேதுறாமலும் உளங் கனிந்து நூறு பாவற்பாடி முடித்தனர். அது, கண்ட அரசன் அதிசயமும் ஆநந்தமும் பேரச்சமு முடையனாகி அவரை வீழ்ந்து நமஸ்கரித்துத் தாமிரசாசனத்தோடு சிலமானியங்கள் கொடுத்தான். இன்றும் அவர் பரம் பரையில் வந்து ளோர் அச்சாசனமும், மானியமு முடை யராய்த் திருக்கடவூரில் வசிக்கின்றார்கள். (இற்றைக்கு இருபது வருஷங்களுக்குமுன் யாம் திருவிடைக்கழிக்குச்