பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு . 168 சென்றபோது அச்சாசனத்தைக் கண்ணாரக் கண்டோம்) பட்டர் முறுகிய அன்போடு பூசித்து வந்த உலகமா தா வாகிய உமாதேவியார் சிலம்பேசந்திரனாகி அரசன் முதலி யோர்க்குத் தரிசனங்கொடுத்துச் சிறிது நேரத்தில் மறைந் தருளிற்றென்பர். ஆறுமுகநாவலர். இவர் யாழ்ப்பாணத்திலே நல்லூ ரிலே வேளாளர் குலத்திலே சாலிவாகன சகம் ஆயிரத்தெழுநூற்று நாற்பத் தைந் தாம் வருஷத்திலே கந்தப்பிள்ளை யென் பவருக்குப் புத்திரராக அவதரித்தவர். இவர் தமிழ் சம்ஸ்கிருதம் ஆங்கிலம் என்னும் முப் பாஷைகளையுங் கற்று, அப்பா ஷைகளிலே விய வகா ரசத்தி வந்தபின்னர், தமிழையே முற்றக்கற்கும் பேரவாவுடைய ராயினார். அதனால் இவர் அக்காலத்திலே பிரபல வித்து வான்களாய் விளங்கிய சரவணமுத்துப் புலவர் முதலி யோரிடத்துச் சில இலக்கண விலக்கியங்களைப் பாடங் கேட்டுத் தமக்குப்பாடஞ்சொன் ன ஆசிரியர்களும் நா ணத் தக்க நுண்ணிய புலமையும், கூர்ந்த விவேகமும், வாக்கு வன்மையும், ஒப்பற்ற ஞாபகசக்தியும், ஆசார சீலங்களும், நற்குண நற்செய்கை களும், சிவபக்தியும், சமயா பிமான மும், சபையஞ்சா ஆண்மையும், பெரிதுமுடையராய் விளங்கினார். பாடசாலைகளுக்கு உபயோகமாகும்படி வசன நடை யிலே பாலபாடங்கள் எழுதி அச்சிடுவித்தார். எவருக்கும் உபயோகமாகும்படி பெரியபுராணம் முதலிய நூல்களை வசன மாக்கினார். கந்தபுராணம், வில்லிபுத்தூ ரர்பாரதம், திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை , 20)