பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 தென்மொழி வரலாறு. ரென்னலாந் தகுதி வாய்ந்தவர். இவர் பாடிய பாடல் களுக்குக் கணக்கில்லை. இவர் ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால் வகைக்கவியும் பாடவல்லவர். இவர் நாகைக்காரோண புரா ணம் மாயூரபுராணம், குடந்தைப்புராண முதலிய ஐம் பது நூல்கள் பாடினவர். இவர் திரிசிரபுரத்திலே பிறந்து திருவாவடுதுறைமடாலயத்திலே கலைபயின்று அம்மடத்து ஆதீன வித்துவானாகி அனேக மாணாக்கரைச் சேர்த்துத் தமிழ்க்கலை பயிற்றி அவர் மூலமாகத் தென்னாடெங்கும் தமிழ்ப்பயிர் வளர்த்தவர். இதுகாறும் சைவவைஷ்ணவ சமயப் புலவர்களையும் அவர்கள் செய்த நூல்களையும் சமணசமயப்புலவர்களை யும் அவர்கள் செய்த நூல்களையும் எடுத்துக் கூறினார். இற் றைக்குச் சற்றேறக்குறைய நானூறு வருஷங்களுக்கு முன் னே தமிழைத் தமது தாய்மொழியாகவுடைய சோ னகர் சிலர் தமிழ்கற்றுப் பாண்டித்தியம் பெற்று விளங்கு வாராயினர். அக்காலத்திலே ஐரோப்பிய தேசத்திலி ருந்து வந்த "பெஸ்கி" யென்பவரொருவர் தமிழ்கற்று வல்லுநராகித் தமிழ் முனிவர்களைப்போல உடைநடை. யுடையவராய் விளங்கினர். அவரை அவர் சீடர்கள் வீர மாமுனி யென்னும் பெயராற் கொண்டாடுவர். தமிழ்ப்புலமை படைத்த சோனகருள், வண்ணக் களஞ்சியப் புலவர், வண்ணங்கள் பாடுவதில் மிக்கவன்மை யுடையவர். இவர் மதுரைமடத்துத் தம்பிரானொருவர் பால் தமிழ் கேட்டவர். இவர் பாடிய பெருநூல் முகிலித் தீன் புராணம், இப்புராணத்தைத் தமது சமயிகள் பொ ருட்டு இயற்றிச்சென்று நாகூரில் அரங்கேற்றினர். இவர் ருடைய சாமர்த்தியத்தைக் கண்ட நாகூர்த் தனவந்த