பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தென் மொழி வரலாறு. 157 9. 2. ரான ஒரு சோனகப் பிரபு தமது புத்திரியை இவருக்கு மணம் முடித்துக்கொடுத்தனர். இவர் செய்யுள் பாடுவதில் மிக்க விரைவுடையவர். சோனகருள் தமிழ்ப்புலமையில் சிறந்தவராக எடுத்துக் கூறத்தக்கவர் இன்னுமொருவர் உளர். அவர் உமறுப்புலவர் என வழங்கப்படுவர். இவர் தம் சமய நூலாகச் செய்த பெரிய சீறாப்புராணம். இது சொன்னயம் பொருணயங்களால் மிகச்சிறந்தது. கிறிஸ்த வராகிய வீரமாமுனிவர் செய்த நூல்கள் தேம்பாவணி, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, அவிவேக பூரணகுரு கதை முதலியன. இவர் இற்றைக்கு நூற்றெழுபது வரு ஷங்களுக்கு முன் இருந்தவர்.