பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. யனாரகப்பொருளுரை யினும் இளம்பூரணர் நச்சினார்க்கி னியர் தொல்காப்பியவுரைகளிலும் காண்க.) குமரியாறு கடல்கொண்ட பின்னர் நூல்செய்தோர் "நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமுந் தமிழ் வரம்பறுத்த என்று குமரியாற்றைக் குமரிப்பௌவமெ ன வழங்குவாரா யினர். (சிலப்பதிகாரம் வேனிற்காதை.) தமிழ்நிலத்துமொழி. தமிழ்நாடு முன்னொருகாலத்திலே வேறு மொழி வழ. ங்கிய நாடாகா' தோவெனின், அற்றன்று. அது பூர்வந் தொட்டுத் தமிழே வழங்கிய நாடென்பது "செந்தமிழி யற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு” என்பது னாற்றுணியப்படும். ஆயினும் தமிழ்நாட்டுப் பழங்குடிகள் அந்நாட்டு விசா லத் துக்குத் தக்கவாறு பரந்திருந்தார் அல்லர். தமிழ்நாட்டுப்பகுதி தமிழ்நாடு செந்தமிழ்நாடென்றுங் கொடுந்தமிழ்நா டென்றும் அங்கு வழங்குந் தமிழியல்பு நோக்கி இருபாற் படும். “குமரிவேங்கடங்குணகுடகடலா - பாண்டி னிமருங்கி ற்றண்டமிழ் வரைப்பிற்- செந்தமிழ் கொடுந்தமி ழென் றிரு பகுதியின் "(சிலப்பதிகாரம்)அவற்றுள் ளே செந்தமிழ்நாடு கடுவாக அதனைச் சூழ்ந்த பன்னிரண்டுங் கொடுந்தமிழ்நா டெனப்படும். அவை "தென்பாண்டி குட்டங் குடங்கள் காவேண் பூழி, பன் றியருவா வதன் வடக்கு - நன்றாய, சீத மலாடு புன னாடு செந் தமிழ் சே, ரே தமில் பன்னிரு நாட் டெண் ” என்னும் வெண்பாவா லறியப்படும். இவற்றைச் சூழ்ந்த வேற்றுமொழி நிலங்கள் பதினேழு. அவை “சிங் களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம், கொங்க ணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம் வங்கம்,