பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 171 பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை. இந்நான்மையும் புன லோடு வழிப்புற்சாய்ந்தாற்போல் வேட்கையான் மீதூரப்பட்டுச் சாய்ந்து கிடக்கும். வேட்கையென்பது என்னோவெனின், ஒருவரொருவரை இன் றியமையாமை. அவ்வின்றியமையாது நின்ற வேட்கை எல்லா வுணர்வினையும் நீக்கித்தானேயாய் நாண்வழிக் காசு போலவும் நீர்வழி மிதவைபோலவும் பான்மைவழியோடி இருவரையும் புணர்விக்கும் என்பது. ஆதலாற் தமியராய்ப்புணர்தல் தலைமையோடு மாறுகொ ள்ளாதென்பது. இது காமப்புணர்ச்சி என்பது. இதனை ஓராசிரியன் உள்ளத் தானே புணர்ந்தாபென் னும்: என்னை? மெய்யுறு புணர்ச்சி பொரு வி றந் தாரென்பதனோடு மாறுகொள் ளும்; யாங்ஙனம் மாறுகொள்ளு மெனின், ஏகதேசத்துப் பிறர்க்குரிய பொருளை வெளவினானைப் பெருமை சொல்லப்படாது. அதுபோல் இவனுங் கொடுப்ப அடுப்ப எய்தற்பாலான் ஏகதேசத்து எதிர்ப்பட்டுச் சென்றெய்தி முயங்கின மையின்; என்னை? பிறர்க்குரிய பொருள் எளிதாகச் செய்யப்படா மையினாம் பெரியனாய்ச் சென்றது. அங்ஙனமாகில் உலகத்துப்பன் மக்களெல்லாம் பெரியர் சீராதபொழுது பிறருடைமைகொள்ளாது சீர்த்த பொழுது வெளவுதலால். இனி இவளுங் குரவரது பணியாற் சென்று அவனை வழிபடற் பாலாள் எகதேசத்துத் தலைப்பட்டமையாற் பெருமையிலள்; என் னை? தேர்ந்து காணாது உள்ளம் ஓடின வழியோடுதலான். உள் ளத்தான் வேட்கைப்படாத பொருளில்லை; அவ்வேட்கைப்பட்டவர் றுக்கணெல்லாம் அறத்தின் வழுவாமையும் பொருளின் வழுவா மையுந் தனக்குத்தாகவும் ஆராயாது உள்ளம் ஓடினவழி ஓடுவித்தல் தக்க தின்றென்பதனால் அது மாறு கொள்ளுமென்பது. மற்றென்னையோ உரைக்குமா றெனின், அவர் தம்முண் மெய் யுற்றுப் புணர்ந்திலர்; இருவர் தங்காமமுமே தம்முட் புணர்ந்தன், என்றிங்ஙனம் உள்ளங்களானின்று புணர்வது புணர்ச்சி; இது பிற ரொருவருணர நெடுங்காலம் புணர்தலாகாதென நீங்குநீக்கம்பிரிவு; அப்பிரிவின் கட்சொல்லுவது மெய்யுறு புணர்ச்சிக்குச் சொல்லுவன.