பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தென்மொழிவரலாறு. வண்டுந் தேனும் யாழ்முரல,வரிக்குயில்கள் இசைபாடத், தண்டாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப்பாறைமணித் தலத்துமிசை நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன்கோலக்கலானங் கொள விரித்து முளையிளஞாயிற்று இளவெயில் எறிப்ப ஓர் இள மயில் ஆடுவது கண்டு நின்றாள். அப்பாற் றலைமகனும் பற்பன்னூறாயிரவர் கூர்வேலிளை யாரோடு குளிர் மலைச்சாரல்- வேட்டம் போய் விளையாடுகின்றான், ஆண்டெழுந்ததோர் கடுமா வின் பின்னோடிக், காவலிளை யவரைக் கையகன்று, நெடுமான் றேயொடு பாகனை நிலவுமணற்கானியாற்று நிற்கப்பணித்துத், தொடுகழல் அடியதிரச் சுருளிருங்குஞ்சி பொன் ஞாணிற் பிணித்துக், கடிகமழ்நறுங்க கண்ணி மேற்கொண்டு வண்டு மண மயர அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன் பொழிலிடைப் பாந்து நாற, அடுசிலை ஒரு கணை ஏந்தி வடிவு கொண்ட காமன் போலச் செ ன்று அவள் நின்ற இரும்பொழில் புகும், அஃதியாங்ங்னமோவெ னின், வடகடலிட்ட ஒரு நுகம் ஒரு துளை தென் கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற்போலவும் வெங்கதிர்க்கனலியும் தண் கதிர்மதி யமுந் தங்க திவழுவித் தலைப்பெய்தாற் போலவுந் தலைப்பெய்து ஒருவரொருவரைக் காண்டல் நிமித்தமாகத் தமியராவர், தமியராதலென்பது தம்முணர் வின ரல்லராதல். தம்முணர் வினரல்லராதலென் பது என்னோவெனின், தலைமகற்கு அறிவு நிறை ஓர்ப்புக்கடைப்பிடி என்பன குணம். அறிவென்பது என்னோ வெனின், எப்பொருளெத்தன்மைத்தாயினு மப்பொருண்மெய்ப் பொருள் காண்பதறிவு என்றாராகலின் எப்பொருளாயினும் அப் பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு. நிறை யென்பது என்னோவெனின், சாப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். ஓர்ப்பென்பது ஒரு பொருளை ஆராய்ந்துணர்த லென்பது. கடைப்பிடியென்பது கொண்ட பொருள் மறவாமை. இந்நான்கையுந் தலைமகற்கு வேட்கையான் மீ தூரப்பட்டுப் புன லோடு வழிப்புற்சாய்ந்தாற்போலச் சாய்ந்து கிடப்பது. இனித் தலைமகட்கு நாணம் மடம் அச்சம் பயிர்ப்பென்பன குணம். அவற்றுள், நாணென்பது பெண்டிர்க்கு இயல்பாக உள் தொரு தன்மை. மடமென்பது கொளுத்தக்கொண்டு கொண்டது லிடாமை. அச்சமென்பது பெண்மயிற்தான் காணப்படாததோர் பொருள் கண்டவிடத்து அஞ்சுவது பயிர்ப்பென்பது பயிலாத