பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 தென்மொழி வரலாறு. வுடைத்து. அவையாவையோ வெனின், காட்சி ஐயந்தெளிதல் தேறலென இவை. அவற்றுட் காட்சியென்பது இருவரும் தம்முட் கண்ணுறுவது. அதற்குச் செய்யுள்:- பூமருகண்ணினைவண்டார்ப்புணர்மென்முலையரும்பாத் தேமருசெவ்வாய்தளிராச்செருச்சென்னலத்தை வென்ற மாமருதானை யெங்கோன்வையைவார்பொழிலேர் கலந்த காமரு பூங்கொடி கண்டேகளித்தவெங்கண்ணினையே. ஐயமென்பது கண்ணுற்றபின் ஜயப்படுவது. எங்ஙனமோ வெனின், வரையாமகள் கொல்லோ வான ரமகள் கொல்லோ நீரர மகள் கொல்லோ இத்துணை மேதகவுடையாள்; அன்றி மக்களுள் ளாள் கொல்லோ என்று ஐயப்படுவது. அதற்குச் செய்யுள் :- உரையுறை தீந்தமிழ் வேந்தனுசி தன் றென்னாட்டொழிசேர் விரையுறைபூம்பொழின் மேலுறை தெய்வங்கொலன் விண் வரையுறைதெய்வங்கொல்வானுறைதெய்வங்கொனீர் மணந்த திரையுறைதெய்வங் கொலையந் தருமித் திரு நுதலே. என இங்ஙனம் ஐயப்படுவது. இவளும் இவனை ஐயப்படும். கடம்பமர் கடவுள் கொல்லோ இயக்கன் கொல்லோ அன்றி மக்க ளுள்ளான் கொல்லோவென்று இங்ஙனம் ஐயப்படும். இவ்வகை நினைத்தபின்னைத் தெளிவு வருமாறு: ஆடைமா சுண்டலானுங் கால்நிலந் தோய்தலானுங் கண் இமைத்தலானுஞ் சாந்து புலர்தலானுமென்று இங்ஙனம் தெரியும் தெரிந்தபின்னைத் துணியு மென் பது. அதற்குச் செய்யுள் :- வடியானைப் பராங்குசன் பாழிப்பகை தணித்த தூவடிவேன் மன்னன் கன்னித் துறைச்சுரும்பார்குவளைப் பூவடிவானெடுங் கண் ணுமிமைத்தன பூமிதன்மேற் சேவடிதோய்வகண்டேன் றெய்வமல்லளிச் சேயிழையே.