174 தென்மொழி வரலாறு. இவளும் இவனை இவ்வாறே தெரிந்து மக்களுள்ளானென்பது தெரியும். தெரிந்தபின்னை இருவர்க்கும் வேட்கை மிகத்தம்மிற் கூடுவது. இவ்வாறு புணரப் பெரிதும் வனப்புடைத்தாய்க் காட்டு மென்பது, இவ்வுரை பொருந்தாது. என்னை காரணமெனின், இது கைக்கிளையிலக்கணம், தெய்வங்கொல்லோ மகடூஉக் கொல்லோ என ஐயமுற்ற ஐயநிலையுந் தெய்வவிலக்கணந் தீண்டா வாகலின் ஐயந்தெரிந்து மகடூஉவாதல் துணிவர உணர்ந்த அத்துணிவு நிலை மையுமெனக் கைக்கிளையிலக்கணமாகச் சொல்லப்பட்டமையின் . ஈங்கத்திணையுள்ள துரைப்பது திணை மயக்கமாகலின் மேலதே பொருள். காமப்புணர்ச்சி யென் றமையிற் காமத்தின் வேறு புணர்ச்சியாகல் வேண்டும் பிற, வாளாற்கொண்ட கொடியென்றது போலவெனின்; அற்றன்று. பொன்னாற்செய்த மஞ்சிகை மண் ணாற்செய்த குடமென்பதுபோல வேறன்றி நிற்புழிக்கொள்க. இஃது இயற்கைப் புணர்ச்சி யெனப்படும், புலவராற் கூறப்பட்ட இயல்பினாற் புணர்ந் தாராகலானுங் கந்தருவ வழக்கத்தோடொத்த இயல்பினாற் புணர்ந்தாராகலானு மென்பது. இனித் தெய்வப் புணர்ச்சி யென வும்படும், இருவருந் தெய் வத்தன்மையாற் புணர் தலினென்பது. அல்லதூம், முயற்சியும் உளப்பாடுமின்றி ஒருவற்கொருமங்கை கூடின விடத்துத் தெய்வத் தினான் ஆயிற்றென்பது. அது போல இவர்க்கு முயற்சியும் உளப் பாடுமின்றிப் புணர்ந்தமையானுந் தெய்வப்புணர்ச்சி யெனப்பட் டது. இது வே முன்னுறு புணர்ச்சி யெனப்படும்; இவள் நலம் இவ னானே முன் னுற எய்தப்பட்டமையானும் இவன் நலம் இவளானே முன் னுற எய்தப்பட்டமையானு மென்பது. இனித் தெய்வப் புணர்ச்சி முன்னுறு புணர்ச்சி இயற்கைப் புணர்ச்சியென அவற்றுளொன்று சொல்லாது காமப்புணர்ச்சி யென்றே கூறிய காரண மென்னையெனின், இவற்றுளொன்றே சொல்லினு மொக்கும்; அல்லாதவையெல்லாம் அன்பினானே நிகழுமாகலிற் காமப் புணர்ச்சி யென் றாரென்பது. பலகாரணத்தி னாய பொருளை ஒரு காரணத்தினாற் சொல்லுவது சிறப்புடைமை நோக்கி; என்னை? நிலனும் நீருங் காலமும் வித்து மென இவற்றி னது கூட்டத்தினாய முளையை நென் முளை யென்ப, நென் முளைக்கு
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/190
Appearance