176 தென்மொழிவரலாறு. பாட்டிற் பிரியானாயினானாம். ஆகவே மூன்றாவது செய்யப்படுவது இல்லையாலோவெனிற் பிரியுமென்பது. ஆயின் அன்பின் மை தங் காதோ வெனிற் தங்கா து. பிரிவும் அன்பினானே நிகழுமாறு சொல்லுதும். ஆறுமுகநாவலருடைய வசனநடை. பெரியபுராணத்திலே சொல்லப்பட்ட அறுபத்து மூன்று நாயன் மார்கள் திருவவதாரஞ் செய்தற்கு முன்னரே அவர்களுடைய சரித்திரம் பரமேதிகாசமாகிய சிவரகசியத்திலே ஒன்பதாம் அமி சத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அங்ஙனம் சொல்லியருளி னவர், எல்லாவறிவும் எல்லாமு தன்மையும் எல்லாவனுக்கிரகமு முடைய பரமபதியாகிய சிவபெருமானே. அதனைக் கேட்டவர் அவ ருடைய அருட்சத்தியும் உலக மா தாவுமாகிய பார்வதிதே வியாரே. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய்த் திருவவ தாரஞ்செய்து மற்ற நாயன் மாரைத் துதித்துத் திருத்தொண்டத் தொகை பாடியருளின வர், சிவபெருமானுடைய பிரதிவிம்பமாய்த் தோன்றினவரும், பிரம வீட்டுணுக்களாலும் அணுகலாற்றாத ஆலா கலவிஷத்தைத் தமது உள்ளங்கையிற் கொண்டவருமாகிய ஆலால சுந்தரரே. அவருக்குத் திருத்தொண்டத்தொகை பாடும்பொருட்டு அடியெடுத்துக் கொடுத்தருளின வர் வன்மீக நாதராகிய சிவபெரு மானே, அச்சுந்தர மூர்த் திநாயனார் சிவபெருமானால் அனுப்பியரு ளப்பட்ட வெள்ளை யானைமேற் கொண்டு பிரம விட்டுணு க்கண் முதலாயினோர் சேவிப்பத் திருக்கையிலா சமலையை அடையும் பொழுது, அவரைத் தூரத்தே வணங்கி அவருடைய சரித்திரத் தையும் அவருடைய திருத்தொண்டத்தொகையிலே துதிக்கப் பட்ட மற்றை நாயன்மார்களுடைய சரித்திரத்தையும் இருடி களுக்குச் சொல்லியருளினவர், சிவபெருமான் சிதம்பரத்திலே கனகசபையிலே எல்லாருக்கும் ஆநந்த நிருத்தந் தரிசிப்பித்தற்கு மூலகாரணராயுள்ள வியாக்கிரமபாத மகாமுனிவருடைய திருக் குமாரரும், சிவபெருமானால் வருவித்தருளப்பட்ட திருப்பாற்
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/192
Appearance