பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. கோடி வேளிருள்ளிட்ட சனங்களை யுங் கொணர்ந்து குடி. யேற்றினர். அவ்வரசர்கள் காடா விருந்த இடங்களை யெ ல்லாந் திருத்திச் சிறந்த நாடாக்கி அகஸ்தியர் கருத்தின் படி அரசியல் வகுத்து அரசு செய்து வருவாராயினர். அகஸ்தியம். அகஸ்தியர் தாம் புகுந்த தேசத்தைத் திருத்திய பின்னர் அத்தேசத்துக்குரிய தமிழ்மொழியையும் திருத்த என்ணி ஓரிலக்கண நூல் செய்து அதற்கு அகத்தியமே னப்பெயரிட்டனர். பன்னிருவர் மா ணாக்கரைச் சேர்த்து அவர்க்கு அவ்விலக்கணத்தை உபதேசித்தனர். தமிழ் இயல் இசை நாடகமென முத்திரப்படும். அகத்தியம் முத்தமிழிலக்கணங்களை யுமொருங்கடக்கிக் கூறுவது, அகத்தியத்துக்கு முதனூல். அகத்தியத்தில் முதனூல் இயலுக்குக் குமாரமும் இசைக்கும் நாடகத்துக்கும் இசை நுணுக்கமுமென்பர். அகத்தியர் குமாரத்தைக் குமாரக்கடவுளிடத்தும் இசை நுணுக்கத்தைச் சிவபெருமானிடத்தும் உபதேசம் பெற் றார் என்பர். காய்சினவழுதி. அதன்பின்னர்க் காய்சின வழுதியென்னும் பாண்டி யன் கல்வியாலும் படைவலியாலும் செல்வத் தாலும் அர சியல் முறையாலும் சிறந்து விளங்கினான். அவன் குமரி யாற்றின் தென் கீழ்த்திசையிலே ஒரு சிறந்த நகரமைத்து அதற்கு மதுரை யெனப் பெயர் புனைந்து அங்கே தனது அரசிருக்கையையும் தமிழை வளர்க்கும் பொருட்டு ஒரு சங்கத்தையும் தாபித் தான். அதுவே முதற்சங்கமாம். முதற்சங்கம். அவ்வரசன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் புருஷார்த்தங்கள் நான்கன்மேலும் நூல்செய்வோர் அச்