பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழிவரலாறு. வன் வெற்பன். நெய்தனிலத்து மக்கள் தலைவன் துறை வன். பாலைநிலத்து மக்கள் தலைவன் மீளி. தேய்வ வழிபாடு. மருதநிலத்து மக்களுக்குக் கடவுள் மருதவேந்தன் (இந்திரன்). முல்லை நிலத்து மக்களுக்குக் கடவுள் விஷ்ணு. குறிஞ்சிநிலத்து மக்களுக்குக் கடவுள் முருகன். நெய்த னிலத்து மக்களுக்குக் கடவுள் திரையன் (வருணன்). பா லைநிலத்து மக்கள் கொற்றியை (துர்க்கை ) வழிபடுவர். மரு தன், மருதப்பன், கரியன், கறுப்பன், முருகன், திரைய ன், கொற்றியென்னும் பெயர்கள் இப்போதருகினவாயி னும், இன்றும் தமிழ்மக்கள் அவைகளைத் தாமிட்டு வழங் குவதுண்டு . எழுத்து. ஆதியில் தமிழுக்கு வரிவடிவாகிய எழுத்துக்கள் உண்டென்பது எழுத்தென் னுந் தமிழ்ச்சொல்லாலினிது துணியப்படும். குமாரக்கடவுளால் ஓரிலக்கண நூல் குமா ரமென்னும் பெயராற் செய்யப்பட்டதென்று கூறுவர். அக்காலத்தில் அவர்களுடைய இலக்கிய நூல்கள் இவை யென்று தெரியவில்லை. அகஸ்தியர்வரவு. இப்படியிருக்குங் காலத்திலே அகஸ்திய முனிவர் உத்தரத்தினின்றும் தென்னாட்டிடைச் சென்று பொதிய த்தில் வசித்தனர். தென்னாட்டுக்கு வரும் வழியில் விந்தி யமலை தடுக்க அதனைப் பாதலத்திலடக்கி இப்பால் வந்த னர். அகம் - மலை. அதனை அடக்கினமையால் அகஸ்திய ரென ப்பட்டார். வேளிர்வரவு. அவர் தமிழ்நாட்டைத் திருத்தவெண்ணித் துவரா வதியிலிருந்து பதினெண்மர் அரசரையும் பதினெண்