பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழிவரலாறு. 15 தமிழ்ச்சொற்பகுதிகள். தமிழ்ச் சொற்களும் வடசொற்கள் போலத் தாதுக்க ளை யுடையனவாம். தாதுவெனிலும் பகுதியெனினும், ஒன்றே. தமிழ்ச் சொற்பகுதிகள் எல்லாச் சொற்களுக்கும் தெற்றெனக் காண்பதரிது. அது பற்றியே தொல்காப்பி யரும் "மொழிப்பொருட்கார ணம் விழிப்பத்தோன் (iny” என்றார். ஆயினும் அண்ணி காக ஆராயுமிடத்துப் புலப்ப டாமற் போகாது. சில சொற்கள் வினையடி யாகவும் சில சொற்கள் உரியடியாகவும் சில சொற்கள் இடையடியாக வும் ஒருசில பெயாடியாகவும் பிறக்கும். அது தான் னும் வினை யடியாக அறம் அறை அறுகு ஆறு= (வழி, நதி) அற்றம் முதலிய சொற்கள் பிறக்கும். அல்கு என்னும் வினை யடி அகு என்றாகி அகம் என்றாயிற்று. அகன் என் பதும் அவ்வாறே. அடு என்னும் வினையடியாக ஆடு அடை அட்டை அடல் அடலை முதலியனவும், அண் என்னும் அடியாக அண்ணன் அண்ணன் அண்ணி அணை அண்மை அணாவு அணுகல் அண்ணல் அணி முதலியன வும், அல் என்னும் அடியாக அலி அல்லல் அல்லாத்தல் அல்= (இரவு) அன்று அலது அல்லி அல்லகண்டம் அல் லோன் அன் றினர் முதலியனவும், அகல் என்னும் அடி. யாக அகன்றில் அகலுள் ஆல்=(மரம்) ஆன்றோர் அகன் றோர் அகல்= (விளக்கு) ஆலல் அகலர் அகலம் முதலியன வும், பகு என்னும் அடியாக பகல் பால் பகை பக்கு பகைவன் முதலியனவும், தொகு என்னும் அடியாக தொகை தொகுதி தொழுதி நோகை= (மயில்) கொக் கார் முதலியனவும், கொள் என்னும் அடி யாக கோள் கொள்ளை கொளல் கொண்டி கோட்பு கோளை முதலிய னவும், பெண் என்னும் அடியாக பெண் பெட்பு பேணல் முதலியனவும், கள் என்னும் அடியாக கள் வர் கள்ளர் கள்ளல் களவு கள்ளம் கள்ளாமை முதலியன