14 தென்மொழிவரலாறு. ழியிலே குடைக்கு வரும் பெயர்கள் சத்திரம், ஆதபத்தி ரம், சத்திரி என் பன. தமிழ்மக்கள் தம்மிடத்துள்ள குளிர் முதலிய வைந்தனோடுமமையாது வடமொழியிலு ள்ள ஆதபத்திரமுதலிய மூன்றையுமா தரிப்பாராய் எட் டுச்சொல்லையுந் தமது நிகண்டிற் சேர்த்துக்கொண்டார் கள். குளிர் வித்தலிற் குடை குளிரெனப்பட்டது; தூக் கங்களையுடைமையிற் றொங்கலெனப்பட்டது; கவிக்கப் படுதலிற் கவிப்பெனப்பட்டது; பிச்சமென்பது முடி.. அதனை யுடைமையாற் பிச்சமெனப்பட்டது; வளைந்து மூடலிற் கவிகையெனப்பட்டது. ஆதபம் வெய்யில்; அதினின்றும் காப்பது ஆதபத்திரம். சத்திரமென்பதன் பொருளுமதுவே. சாவின் பெயர் துஞ்சல், இறத்தல் முதலிய பதி னேழு. அவற்றுள் துஞ்சல் என்பது சித்திரை செய்தல். சாதல் அதுபோ லு தலின் துஞ்சல் என்னும் பெயர் கொ ள் வதாயிற்று. இஃதொப்புமைபற்றி வந்தது. இறத்தல் என்பது கடத்தல். சாதல் இவ்வுலகங் கடத்தலாதலின் இறத்தலெனப்பட்டது. இஃது பசாரப்பொருள். இவ்வா றுவரும் பரியாயங்களும் அநந்தம். துஞ்சல் என்பது 'செத்தா னெனப் பெரும்பான் மை வழங்கப்பட்டன. தகுதிநோக்கித் துஞ்சினானெனச் சிறுபான்மை வழங்கப்பட்டு நிற்கும் என் றலிற் பகுதி பற்றிய வழக்கென்பர் நச்சினார்க்கினியர். இவ்வாற்றால் தமிழிலேயுள்ள ஒருபொருள் குறித்த பலசொற்களைநோ க்குமிடத்துப் பொருள்களினியல்பு பலவற்றையும் பண் டைத் தமிழ் மக்கள் நன்குணர்ந் தவர்களென்பதும் இனிது துணியப்படும்.
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/30
Appearance