பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 13 ஒரு பொருளுக்கு ஆதியில் வந்த பெயர் ஒன்றே. அது வழங்கலாறு குறித்து வந்தது. பின்னர் அப்பொருளுக்குக் காலந்தோறும் அதன் அகத்தியல்பு புறத்தியல்புகளை நோக்கி ஆய்ந்தோர் பலபெயரிட்டு அப்பலபெயராலும் அதனை வழங்குவராயினர். ஒரு பொருள் குறித்த பலசொல் எனினும் பரியாயமெனினும் ஒன்றே. இவ்வாறமைந்த சொற்கள் தமிழில் எண்ணிலவுள. மற்றெப்பாஷைக்கண் ணும் நாமாய்ந்தவரையில் அத்துணை யில. பரியாயம் ஒரு பொருள் குறித்த பலசொல்லேயாயி னும் அச்சொல்லெல்லாம் தனித்தனி ஒவ்வொரு பொரு ளையுடையனவாய்ச் சம்பந்தவாற்றலாற் பிறிது பொருளு ணர்த்துவனவாம். ஆதலால் அவை ஒரு பொருள் குறித்த பலசொல்லேயன்றி ஒருபொருட்சொற்களெனக் கொள் எப்படா. ஒருபொருட் பன்மொழி இல்லென்றலேசொன் னூல்வல்லார் துணிபாம். புஷ்பத்திற்கு ஆதியிலிடப்பட்ட தமிழ்ப்பெயர் பூ' அதற்குப் பின்னர்ப் போது என்றும், அலர் என்றும், மலர் என்றும், வீ என்றும் பல பெயர்கள் வழங்குவன வாயின. அற்றைப்போ தில் மலரும் பூ போது எனப்பட் டது. அலரென்பது முறுக்க விழும் பக்குவத்துப் புஷ்பம். மலரென்பது முற்றவிரிந்த பூ. வீ என்பது உதிரும்பக்கு வத்து மலர். எனவே இச்சொல்லெல்லாம் பூவின் பெய ராயினும் அவை ஒவ்வொரு காரணம் பற்றி வந்தனவே யாமென்பது நன்கு துணியப்படும். மற்றைப்பாஷையின் கண்ணேயுள்ள பரியாயங்களில் னும் தமிழின்கண்ணேயுள் ளன மிகப்பலவென்பது சிறிது காட்டுதும். குடைக்குத் தமிழிலேயுள்ள பரியாயம் குளிர், தொங்கல், கபிப்பு, பிச்சம், கவிகை, என்பன, வடமொ