பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தென்மொழி வரலாறு மகம், யூபம் என்னும் பெயர்களுள்ளே வேள் வியென்ப தொன்றுமே தமிழ்ச்சொல். மற்றைய பெயர்களெல்லாம் வடசொற்களேயாம். எச்சம் என்பது யஜ்ஞம் என்பதன் சிதைவு. இன்னும், ஒரு பாதையின் கண்ணேயுள்ள சொல்வளங் கொ ண்டு அப்பாஷையாளரது விருத்தியும் நாகரிகமும் அள க்கப்படும். விருத்திப்பெருக்கால் செல்வமும், செல்வப் பெருக்கால் எல்லா நாகரிகங்களும் விருத்தியாவது நுண் ணறிவுடையார்க்கெல்லாம் பிரத்தியட்சமாம். நாகரிகம், உடை நடை ஊண் முதலிய உலகபோகங்களுக்கு மாத் திரமன்று: மனத்தின் கண்ணே கிடக்கும் கருத்து வகைச் சிறப்புக்குக் காரணமாம். காட்டில் வாழும் வேட்டுவமாக்கள் வழங்குஞ் சொற் கள் மிகச் சிலவினுஞ் சிலவேயாம். அவரினுங் குக்கிராம் வாசிகள் வழங்குஞ்சொற்கள் அதிகம். அவரினும் பெரு நாட்டில் வாழுமாந்தர் வழங்குஞ்சொற்கள் அதிகம். அவ ரினும் நகரவாசிகள் வழங்குஞ் சொற்கள் அதிகம். அவ ரினும் கற்று வல்ல பண்டிதசிகாமணிகள் வழங்குஞ்சொற் களே பன்மடங்கதிகமாம். மற்றோரெல்லாம் ஒரு பொருளை ஒரு சொல்லால் வழங்கக்,கற்றுவல்ல நாகரிகரும் பண்டிதசிகாமணிகளும் ஒன்றை இயற்சொல்லால் வழங்குதலேயன்றிப் புனைந்து ரை வகையானும் அதற்குரிய பலவேறு பட்ட இயல்பெ டுத்துரைக்கு முகத்தானும் பலபெயரிட்டும் வழங்குவர். மாந்தருக்குள்ள உலகபோகமும் மனோவிருத்தியும் விவேகமும் எவ்வளவாக வி ரி யு மோ அவ்வளவாகச் சொற்களும் பெருகும் அது பற்றியே காட்டு வேட்டுவ மாக்கள் நு கர் வன வுங் கருது வன வுஞ் சிலவாதலின் அவர் வழங்குஞ் சொற்களுஞ் சிலவா யின.