தென்மொழிவரலாறு. 11 பரி. ப.யப் பெயர்கள், அகஸ்தியர் வந்தபின்னர் அவருடைய மாணாக்கரும் மற்றைப் புலவர்களும் செய்யுள் செய்யும்போது, முட்டு ற்றவிடத்துப் பரியாயப் பெயர்களாக அ நேக வடமொ ழிச் சொற்களைச் சேர்க்கத் தொடங்கினர். முகமென்பது தமிழுக்கும் வடமொழிக்குமுரிய பொதுச் சொல். அது போலக் காலம் உலகம் தெய்வம் என்பன வும். தமிழிலும் வடமொழியிலும் வழங்குஞ் சொற்களாம். அவை வட சொல்லன்றெனக் கூறுவர் நச்சினார்க்கினியர். (காலமுல கம் என்னுஞ் சூத்திரவுரையிற் காண்க.) முகத்துக்குத் தமிழிலே பரியாயப் பெயர்கள் ஆதியில் இல்லை, வதனம் ஆனனம் துண்டம் வத்திரம் என்னும் வடமொழிச்சொ ற்கள் நான்கும் பிற்காலத்திலே முகத்துக்குப் பரியாயப் பெயர்களாகத் தமிழ்ப்புலவர்களால் எடுத்துக்கொள்ளப் பட்டன. தமிழிலே ஒருபொருளுக்குப் பல பெயர்கள் பண் டைக்காலத்துமுள்ளனவேயாம். எழுது தல், தெரித்தல், வரைதல், தீ ட் டு த ல், பொறித்தல், கீறல், வரித்தல், இவை ஒருபொருண்மேல் வரும் தமிழ்ச்சொற்கள். ("தெ ரித்தலே வரை தலோடு தீட்டுதல் பொறித்தல்கீறல் - வரித் தலே யெழுது தற்பேர்” என்பது நிகண்டு.) எழுதுவதற்குப் போதிய பரியாயப்பெயர்கள் தமிழில் இருந்தமையால் வடமொழியிலிருந்து அப்பொருட்சொற்களை வாங்காரா யினர். வேள்வியென்பது அகஸ்தியர் வருமுன்னே சாதா ரண மாகத் தெய்வங் க ளு க்கிடும் பொங்கல் விழாவாயிருத் தல்வேண்டும். அகத்தியர் வந்தபின்னர் அப்பெயர் பல்வ கையாகங்களுக்கும் பொதுப் பெயராயிற்று. யாகத்துக் குரிய எச்சம், கிரது, வேள்வி, இட்டி, யசனம், ஓமம்,
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/27
Appearance