உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழிவரலாம். தும். எவ்வெட்டு என்னுமிடத்தும் எட்டென் பது எண் ணென வும் எ எனவும் திரியுமியல்பு தமிழுக்குரியதாம். தமிழ் இலக்கங்கள். தமிழிலக்கங்களும் தமிழுக்கே உரியனவாம். அவ் விலக்கங்களையே வடமொழியாளரும், மிசிர (Egypt) தேசத்தாரும் பர்ப்பரதேசத் தாரும் (Arabia) ஐரோப் பியரும் தமிழரிடத்துப் பெற்றுத் தமது பாஷைகளுக்கும் இலக்கமாக்கிக் கொண்டார்கள். தமிழிலக்கங்களினது வடிவங்களையும் மேற்கூறிய பாஷையாள ருடைய இலக் கங்களின து வடிவங்களையும் ஒப்புநோக்குமிடத்து அவ் வுண்மை இனிது புலப்படும். ஒன்பது என்பதன் பொருள் ஒன்று குறைந்த பத்து. அதனை யுணர்த்தும் இலக்கம் இது கூ, அதன் பூர்வவடிவம் இது 01. அஃது இப்போது கூ 9 இப்படித் திரிந்து விட்டது. சொல்லும் பொருளும் வரிவடி வும் ஒத்திருத்தலே அது தமிழிலக்கமென்பதை நாட்டும். ஒன்றொழிபத்து என் னும் பதப்பொருள் தரும் இலக்கப்பெயர் மற்றெப்பா ஷைக்கண்ணுமில்லையென்றால் அதற்கு வேறு எதுக் கூறவேண்டா. ஆதிகாலத்திலே தமிழ்நாட்டிலே கம்மியப்பொருள் காருகப்பொருள் மிளகு ஏலம் இலவங்கம் முதலிய சம் பாரப்பொருள்களின் மிகுதி நோக்கிப் பர்ப்பரதேசத்தா ரும் ஏனைய யவனர்களும் தமிழ்நாட்டுக்கு வருவர். வந்து வாங்கிப் பொதி செய்து மரக்கலங்களிலேற்றிச் செல்வர். அப்பொதிகளிலே தமிழ்வணிகர் தம்பெயரும் இலக்கமு மிடுவர். அவ்விலக்கங்கள் வாய்ப்பும் வனப்புமுடையன வாயிருந்தமையால் அவற்றை அந்த யவன வணிகர் தா முங்கொண்டு வழங்க அவ்வாயிலாக அத்தேசங்களிலும் வழங்குவனவாயின. இவ் வு ண் ைம சிலப்பதிகாரத்து (வம்பமாக்கள்) என்பதனால் அனுமிக்கப்படும். அது நிற்க.