பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. நாண் முதலாகக் கணவனும் மனை வியுமாகப் பிரியாது வாழ்வதே பூர் வ விவாக முறையாகத் தோன்றுகின்றது. அம்முறை அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னு நான்கு வருணத்தார்க்கு முரியதாயிருந்தது. பின்னர் அவர்கள் தாங்கொண்ட பெண்ணைப் பெண்டாட்டியல் லளென்று கூறி வாய்புகடந்து வேறு பெண்ணைக் கைக் கொண்டொழுகவுந் தலைப்பட்டார்கள். அங் இனங் கைவி டப்பட்ட பெண்கள் மானம்பற்றி உயிர் போக்கவும் கலைப் பட்டார்கள். அது பற்றி யே கர ண ம்பிழைக்கின் மரணம் பயக்குமென்னும் பழமொழியும் வந்த தாம். அது கண்டு அகத்தியர் விவாகமுறைகளை வகுப்பா ராயினர். அது "பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தாற் றுணரியப்படும். விவாகமுறைகளை வகுத்தபோது பழைய வழக்கங்களை யுந் தழுவியே வகுத்தாரென்பதும் ஒருவாறு புலப்படுகி ன்றது. விவாகம் என்னும் வடசொல் தமிழிலே வரைவு என்பதற்குச் சமமாம். விவாகம் என்னுஞ் சொல் உரிமை. யாக்கு என்னும் பொருள்படும் தாது விற் றோன்றியது. எனவே அதன் பொருள் உரிமையாக்கல். வரைவு என்ப தும் அப்பொருட் சொல்லே. கிழவோன் என்பதன் பொ ருள் உரியோன். அஃதாவது பெண்ணுக்குரியவன் என்ப தாம். கிழவி - ஆடவனுக்குரியவள். கிழமை = உரிமை. தனிமையினெதிர்ப்பட்டுக் காதலித்துக் கூடிப் பின் னர்க் கைவிடுதலையும் அதனால் வருந் துன்பங்களையுங் கண்ட முனிவர், விவாகங் கொள்வோருங் கொடுப்போரு முடைய தாய் அக்கினி சான்றாக மந்திரத்தோடு நடக்கற் பாலதென்று விதிப்பாராயினர். பெண்ணைக் கொடுத்தற்