பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தென்மொழிவரலாறு. குரியோர் தாயொடு பிறந் தாரும் தன்னையரும் தாத்தா ரும் ஆசானும் முதலியோருமாவர். பெண்ணை ஒருவருமறியாது கொண்டுபோகும் வழக் கத்தைத் தவிர்க்குமாறே கொடுப்போர் வேண்டுமென விதிக்கப்பட்டது :- கொடுத்த லுஞ் சுற்றமுந் தீயுஞ் சான் றாக ஆசான் வேள்விசெய்து கொடுத்தல் வேண்டுமெனப்பா ட்டது. கொண்டவிடத்தும் முதனாட் சந்திரனுக்கும் இரண்டாநாட் கந்தருவர்க்கும் மூன்றாநாள் அக்கினிக்கும். கன்னிகையைச் சமர்ப்பித்து நான்காநாளே அவளைக்கூட ல் வேண்டுமென விதிக்கப்பட்டது. வேட்டல் விதியுளி வேலஞ்செய்தல் என்னுஞ் சொ ற்கள் விவாகத்துக்கு வழங்கத் தொடங்கியதும் இவ்விவா கவிதி வகுக்கப்பட்ட பின்னரே யாம். சுற்றத்தாரைக் கூட்டி. அவர் முன்பாக மணமுடித்தல் அவசியமாயினமை யால் மணப்பந்தரிடுதலும் மங்கலவாத்தியம் முழக்குத் லும் ஆடல் பாடல் முதலியனவும் இதன் பின்னர்த் தொ டங்கினவேயாம். மணவோலையனுப்பும் வழக்கமும் மண முழவென்னும் வழக்கும் இதன் பின்னர் வந்தனவேயாம். மன்றல் என்னுஞ் சொல் 17 கந்த மாகிய மணத்தின் பரியா யப் பெயர். தலைவனும் தலைவியும் தமியராய் எதிர்ப்பட்டு மோந்து கொண்டாடு முடன்பாடு பற்றி வந்த பெயர் போலும். அது நிற்க, அகஸ்தியர் காலத்திலே வழங்கிய சொற் கள் பல பிற்காலத்திலே வழக்கிறந்தன. அவர் காலத்திலே வழங்காத சொற்கள் சிற்காலத்திலே வழங்குவனவா யின. அவர் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் சகர அகரத்தை முதலாக வுடைய தமிழ்ச்சொற்கள் வழங்கவி ல்லை. சட்டி சட்டம் சட்டுவம் சட்டை சந்திரன் சஞ்சலம் சல்லி சனி முதலியன தமிழ்ச்சொற்களல்ல.