பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 19 இக்காலத்திலே என்னவென்றும் என்னை யென்றும் வழங்குஞ் சொல் அகஸ்தியர் காலத்திலே எவன் என வழ ங்கிற்று. அது தொல்காப்பியர் காலத்தும் அவ்வாறே வழ ங்கிவந்ததென்பது "அகத்திணை மருங்கின் ” என்னுஞ்சூத் திரத்தாற் பெறப்படும். எவன் என்னும் பெயர்ச் சொற்கும் எவன் என்னும் வினாவிடைச் சொல்லுக்கும் வேற்றுமை ஓசை வேறுபாடு அக்காலத்துண்டு. என்ன என்னும் பொருளில் வரும் போது எவன் என்பது எடுத்துச்சரிக்கப்படும். பெயராய் வரும் போது எவன் என்பது படுத்துச்சரிக்கப்படும். அகஸ்தியர் சூத்திரம். அகஸ்தியர் செய்த இலக்கண நூற் சூத்திரங்களுள் இறவாதெஞ்சியுள்ளன சில னேயென முன்னே கூறினார். அவற்றுள் ஒன்றை இங்கே காட்டுதும். வயிரவூசியுமயன்வினை விரும்பும் செயிரறு பொன்னைச் செம்மை செய்யாணியும் தமக்கமைகருவியுந் தாமாமவைபோ லுரைத்திறமுணர்த்த லு முரையதுதொழிலே" இச்சூத்திரத்தை நோக்குமிடத்து அகஸ்தியர் கால த்திலே வயிரத்தை வயிரவூசிகொண்டு வெட்டிப் பலவ கைப் பட்டமிடுந் தொழிலும் பொன்னினாலே பலவகைப் பணிகளுஞ் செய்யும் தொழிலும் இரும்பினாலே பலவ கைப் படைக்கலங்களும் மர். 33 ய கருவிகளும் இயற்றுந் தொழிலும் நடைபெற்றுவந்தன வென்பதும் அதனால் அக் காலைத் தமிழர் நாகரிகத்தில் மற்றைத் தேசத்தாரினும் மிக்குயர்ந்து விளங்கினாரென்பதும் துணியக் கிடக்கின் றன. அகத்திய சூத்திரங் கள் இப்போதகப்படுவன மிகச் சிலவேயாயினும் அவற்றை நோக்குமிடத்து அவற்றால் அநுமானிக்கக் கிடக்கும் அக்காலத்துக் காரியங்கள் அனேகம்.