பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தென்மொழிவரலாறு. முதல் நாற்பத்தொன்பதின்மர் பாண்டியர் வழி வழி வளர்த்து வருவாராயினர். அது நிலையுற்றிருந்த காலம் ஆயிரத்துத் தொ ழா யிரத்தைம்பது வருஷம். கடைச்சங் கத்திலிருந்த புலவர்கள் இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிளநாகர், கணக்காயர், நக்கீரர், கீரங்கொற்றர், தே னூர்கிழார், மண்லூராசிரியர், நல்லூர்ப்புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார், செல்லூர் ஆசிரியர், முண்டம் பெருங் குமரர், நீலகண்டனார், சீத்தலைச் சாத்தனார், உப்பூரிகுடி கிழார், உருத்திரசன் மர், மருத்துவன்றாமோதரனார், கபி லர், பரணர், கல்லாடர் முதலிய நானூற்று நாற்பத் தொன்பதின் மர். அவர்கள் 1 ற் செய்யப்பட்ட நால்கள் முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநா னூ று, புறநானூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, வரி, பதிற்றுப்பத்து, எழுபது பரிபாடல், குறுங்கவி, இறையனாரகப்பொருள், வள்ளுவர் குறள், பாரதவெண்பா முதலியன. அவர் களுக்கு இலக்கணப் பிர மா ண நூல்கள் அகத்தியமுந் தொல்காப்பியமுமாம். இடைச்சங்கத்தில் வழங்கிய நால்களுள் {ளே இவையிரண்டுமே கடைச்சங்க த்தார்க்கு அகப்பட்டன. மற்றைய நூல்களெல்லாம் சமுத்திர வாய்ப்பட் டழிந்த துண்மையே யாமென்பது அவை கடைச்சங்கத்தார்க்குப் பிரமாண நூ லாகா மைய னாலும் வலியுறுத்தப்படும். இங்ஙனம் ந டைபெற்று வந்த கடைச்சங்கம், உக்கி ரப்பெருவழுதியென்னும் பாண்டியன் இறத்தலோடும். நிலை தளர்ந்தெடுங்கிற்று. அச்சங்கத்திலே சமணர்களும் சைவர்களும் வைஷ்ணவர்க ளுமிருந்து விளங்கினரென் பது அக்காலத்து நூல்களாலினிது விளங்கும். பல சமயி கள் மாந்திர மன்று, நான்கு வருணத்தாருமே சங்கப்புல வர்களாய் விளங்கி வரென்பதும் நன்கு புலப்படுகின்றது. க கடைச்சங்க வரலாற்றை போல் வரும் ஆசிரியப்பாக் கூர் றா னுணர் ச;---