பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தென்மொழி வரலாறு. நூலெல்லாம் அழிந்து பெயர் தாமுங் கேட்கப்படாதோ ழிந்து போகத் தொல்காப்பிய மாத்திரமிறவாது நங்காலத் திலுநின்று நிலவப்பெற்றது தமிழ்மாதும் தமிழ்நாடுஞ் செய்த புண்ணியமேயாம். இந் நூல் அகத்தியத்துக்கு வழிநூலாயினும் இதற் குப் பிற்படத் தோன்றிய இலக்கண நூல்களுக்கெல்லாம் முதனூலாம். இஃது இயல் இசை நாடகமென்னுமுத்த மிழுக்கும் இலக்கணங் கூறும் அகத்தியத்தைத் தழுவி இயற்றமிழை மாத்திரம் வேறுபிரித்து அதன் இலக்கண த்தை எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்று மூன்று பகுதியாற் கூறுவது. பொருளதிகாரத்தில் யாப்பும் அணியுங் கூறப்படுதலின் பஞ்சலக்கணமுங் கூறுவது மாம். எழுத்ததிகாரம் சிறப்புப்பாயிரத்தை விட நூன்ம ரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலு கரப் புணரியல் என ஒன்பது பகுதியினை யுடையது. சொல்லதிகாரம் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினை யியல், இடையியல், உரியியல், எச்சவியல் என ஒன்பது பகுதி யினையுடைய து. பொருளதிகாரமும் அகத்திலை யியல், புறத்திணை யியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டி யல், உவமவியல், செய்யுளியல், மரபியலென ஒன்பது பகு தியினையுடையாது. ஆகவே தொல்காப்பியம் மூன்றதிகார மும் ஒவ்வோரதிகாரத்துக்கும். ஒன்பது பகுதியாக இரு பத்'தேழு பகுதியுமுடையது. எழுத்ததிகாரம் நா நூற் றெண்பத்து மூன்றும், சொல்லதிகாரம் நா நூற்றறுபத்து