பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 35 வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது" என்பது தொல்காப்பியச் சூத்திரம். இதற்கு நச்சி னார்க்கினியர் உரை :- துறவறத்தினைக் கூறும் வேதாந்த முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது. அக்கல் வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது. மூன்று பதமா வன, அதுவென்றும் நீயென்றும் ஆனாயென் றுங் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும் அவ்விரண்டுமொன் றாதலும் ஆதலின் இம் மூன்றுபதத்தின் கண்ணே தத்து வங்களைக் கடந்த பொருளையுணர்த்தும் ஆகமங்களெல் லாம் விரியு மாறுணர்ந்துகொள்க. இது மூன்று வருணத் தார்க்குங் கூறினார். எனைய வேளாளரும் ஆகமங்களா னும் அப்பொருளைக் கூறிய தமிழானும் உணர்தல் "உயர் ந்தோர்க்குரிய" என்பதனான் உணர்க. மூன்றுபதமாவது தத்துவமசிமகாவாக்கியம். இம் மகாவாக்கியத்தை விளக்குவன வேதோபநிடதங்களும் ஆகமங்களுமாம். தொல்காப்பியம். தொல்காப்பியர் செய்தமையால் தொல்காப்பிய மெ னப்பட்டது. இதுவே இப்போதுள்ள தமிழ் நூல்களுக் கெல்லாம் தாய் நூலாம். இது போலும் முதிய நூல் எப் பாஷைக்கண்ணுமில்லை. வேதவியாசர் வேதங்களை வகுத் தகாலத்துக் கு முந்தியது. கலைச்சங்கத் திறுதிக்காலத் திலே செய்யப்பட்டது. இடைச்சங்கத்தார்க்குங் கடைச் சங்கத்தார்க்கும் ஆதார நூலாயிருந்ததுமன்றி இக்காலத் தார்க்கு நூலாகவுள்ளது. இடைச்சங்கம் நிலைபெற்ற காலம் 3700 வருடம் கடைச்சங்கமிருந்தவருடம் 1950. கடைச்சங்கம் அழிந்தபின்னர்க் கழிந்தவருடம் இதுகா றும் 1800. ஆகவே தொல்காப்பியம் 7000 வருடத்துக்கு முந்தியது என்பது நன்கு நாட்டப்படும். முதற்சங்கத்து