பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. தமிழர் ஆரியரே. ஆரியதேசம் இமய முதல் கன்னியாகுமரி வரையு முள்ள தேசமாம். அதில் இமயமுதல் விந்தமலை வரைக்கு முள்ள பகுதி ஆரியா வர்த்த மெனப்படும். (மது. 11. 22) ஆரியதேசமே ஆரியர்க்குப் பூர்வமுத லா க வுரிமையுள்ள தேசம். விந்தியமலைக்குத் தெற்கே குமரிவரையுமுள்ள பகுதி தக்ஷிண மெனப்படும் ஆரியர் கள் மிக நெருங்கிக் குடிகொண்டிருந்தமையால் உத்தரதேசம் ஆரியாவர்த்த மெனப்பட்டது. ஆவர்த்தம் என்பது குடி நெருங்கிய விடம். தக்ஷிணதேசத்திலே நருமதைக்கும் கோ தா விரிக் குமிடையேயுள்ள பிரதேசம் தண்டகாரணியமெனப்படும். இத் தண்டகாரணியத்துக்குத் தெற்கின் கண்ணே குமரி வ ரையுமுள்ளதேசம் தமிழகமெனப்படும். தமிழகம் இடை பயிடையே சிறிய கிராமங்களும். காடுகளு முடையதாயி ருந்தது. தமிழகத்திலே அகத்தியர் வரும்போது குடி.க ளிருந் தார்களென்பது காஞ்சிப் புராணத்தால் நன்கு துணி யப்படும். அது மாத்திரமன்று, அவர் தாம்புகுந்த நாட் டிலுள் ளாரோடு பயிலும்போது அவர்கள் பாஷையையும் நன் காராய்ந்தவராதல்வேண்டுமன்றோ. அதனை ஆராயப் புகுந்து, அடைவுபிறழ்ந் தோ ஓதற்கெளிதா காதோ கிடந்த பூர்வ இலக்கணத்தை மிக்க சிறப்பமைய விரித்து அகத் தியமெனத் தம்பெயராற் செய்தமையாலுந் துணியப்ப டும். வேற்றுநாட்டிற் புகுந்து அந்நாட்டாரால் நன்கும் திக்கப்பட விரும்பும் புலவர் அந்நாட்டுப் பாஷையைக் கற்று நூல்செய்தல் இயல்பு. வீரமாமுனி என்னும் பெஸ்கி, அவர்க்குப் பன்னெடுங்காலத்துக்கு முன் விளங் கிய யவனாசாரியர், போகர் என்னும் அந்நிய தேசத்தார் இந்தியாவில் வந்ததும் நூல்செய்ததும் நோக்கத்தக்கன. இவர்கள் பெயர்கள் இன்றும் நின்று நிலவுகின்றன, அது