பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. தெற்கின் கண்ண ஆதிதொட்டு வாழ்ந்த ஆரியர்க் குத் தமிழும் வடக்கின் கண்ணே வாழ்ந்த ஆரியர்க்குச் சம்ஸ்கிருதமும் சிவபிரானால் அருளிச்செய்யப்பட்டன. இவ்வுண்மை , "இருமொழிக்குங் கண்ணுதலார்முதற்குரவர் என் னுஞ் செய்யுளாற் றுணியப்படும். தமிழைத் தென் மொழியென்றும், சம்ஸ்கிருதத்தை வடமொழி யென்றும் திசைபற்றி வழங்குவாராயினர். இதனால் பூர்வத்தில் இந்த இருமொழிகளுமே ஆரியதே சத்தில் வழங்கின வென்பதும் துணியப்படும். கம்பர் வட சொற்குந் தென்சொற்கும் வரம்பாகும் வேங்கடம்” எனக் கூறியது இதனை வலியுறுத்தும். இருபாஷையாளரும் ஆரியரே யாதலின் ஒத்த சரீர வடிவமும் ஒத்தகுணமும் ஒத்த கொள்கையும் ஒத்தபழக் கமும் ஒத்தவுடையுமுடையராய்ப் பண்டுதொட்டு வாழ் ந்து வருகின்றனர். இருவர்க்கும் வேதமொன்றே, புராண மொன்றே, மிருதியொன்றே, இதிகாசமொன்றே, சரியை யொன்றே, கிரியையொன்றே, யோகமொன்றே, ஞான மொன்றே. தமிழர் ஆரியரின் வேறாயின் இவையெல்லா மொத் திரா. மற்றெல்லாம் சார்பினால் ஒருவாறு ஒத்திருக்குமே னக் கொள்ளினும் சரீரவடி வம் சிறிதும் ஒத்திராது. மலா யர், சீனர், காப்பிரியர் முதலிய மனுஷ கணங்களிலே தமி ழர் சேர்த்தெண்ணவும்படார். தமிழர் தாம் எக்கணத்திற் சேர்த்தெண்ணப்படத் தக்காரென்னிற் சுத்த ஆரியகணத் திலேயே சேர்த்தெண் ணப்படத் தக்காரென்பது வெள் ளிடை மலைபோற் றெள்ளிதாம். அநாரியர் என்றொரு வகுப்பாருள் ரன்றோ . அவ்வ குப்பிலே தமிழர் சேராரோவெனிற் சேரார். அநாரியார்