பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. குருகு. இதுவும் இடைச்சங்கப்புலவர் இயற்றிய ஒரு நூல். முதுகுருகென்னும் நூல் தலைச்சங்கப்புலவர் இயற்றியது. அதுவும் வேறு. இதுவும் வேறு. வெண்டாளி. இதுவும் இடைச்சங்கத்தார் செய்த நூல்களுள் ஒன்று. பெயர் மாத்திரமன்றி வேறுயா தும் புலப்படவில்லை. வியாழமாலை. இதுவும் இடைச்சங்கத்தார் செய்த நூல்களுள் ஒன்று. இதன் வரலாறு யாதும் தெரிய வில்லை. கலியும் குருகும் வெண்டாளியும் செய்யுளிலக்கியமென, சிலப்பதி கார உரைப்பாயிரங் கூறும். இதுவும் அதுவே கூறும். இவையே இடைச்சங்கத்தார் செய்த நூல்களுள் முக்கிய மானவை. சம்பந்தர் தேவாரம் சீர்காழியிலே பிராமணகுலத்திலே சிவபாதவிருதய ருக்குப் பகவதியாரிடத்திலே புத்திரராக அவதரித்தவர். மூன்றாண்டு நிரம்பியபோது உமாதேவியாரால் ஞானப்பா லூட்டப்பட்டவர். அன்றுமுதல் வேதத் துண்மைப்பொ ருளை யெல்லாம் திருவாய் மலர்ந்தருளும்பொருட்டு, அற்பு தமய'மாகிய தேவாரங்களைப் பாடத் தொடங்கினவர். அதன் பின்னர் ஒத்தறுத்துப் பாடும் பொருட்டுச் சிவபெ ருமானது திருமுத்திரையிடப்பட்ட ஒரு பொற்றாளங் கையில் வந்திருக்கப் பெற்றவர். சர்வ சாத்திரங்களையும் ஓதா துணர்ந்தவர். ஸ் தலங்கள்தோறுஞ் சென்று சுவாமி தரிசனஞ் செய்யும்பொருட்டு ஏறு தற்கு முத்துச்சிவிகை பெற்றவர். பாம்பு கடித்திறந்த பூம்பாவையென்னும் பெண் >