பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு. னும் அவர் திருவாய்மலர்ந்தருளிய தேவாரங்களிலே கூறப்பட்டுள்ள சில விஷயங்களைக்கொண்டும் அவர் கால த்தில் அவருடைய திருக் கூட்டத்தாரு ளொருவராய் விளங்கிய திருநாவுக்கரசு நாயனாரருளிச்செய்த தேவாரத் திலே கூறப்பட்ட சில ஏ துக்களைக்கொண்டும் பிற நூற் பிரமாணங்கொண்டும் நன்கு நிச்சயிக்கப்படும். சம்பந்தர் தேவாரத்திலே வேயுறு தோளிப் பதிகத் திலேயுள்ள "என்பொடு கொம்பொடாமை" என்னும் பாசு ரத்திலே வரும் "ஒன்பதொ டொன்றொடேழு பதினெட் டொடாறு முடனாயநாட்களவைதாம்” என்பதன் பொ ருளை நிச்சயிப்பதனால் அவருடைய காலநிச்சயத்துக்கு ஓரதிப்பிரபல ஏதுப் பெறப்படும். சோதிடநூலிலே கூறப் பட்ட பிரயாணத்துக்கு ஆகாத நட்சத்திரங்கள் பன்னி ரண்டுமே இப்பாசுரத்திலே சுட்டப்பட்டன. அவை திரு வாதிரை, பரணி, கார்த்திகை, ஆயிலியம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை , விசாகம், சுவாதி, சித்திரை, மகம் என்னும் பன்னிரண்டுமாம். சம்பந்தர் காலத்திலே முதலா கக்கொண்டு எண்ணப்பட்ட நட்சத்திரம் கார்த்திகை. அயன சலனத்தினாலே தொ ழாயிரத்தெண்பத்தெட்டு வரு ஷமும் நான் குமாசமுமாகிய காலவட்டந்தோறும் ஒவ் வொரு நட்சத்திரம் துருவம் பெறும். அஃதாவது நட்சத் திரதுருவகாலம் தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷ மும் நான்கு மாசமுமாமென்க. இங்ஙனம் துருவம் பெறும் நட்சத்திரமே அத்தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷ காலத்துக்கும் முதல் நட்சத்திரமாகக் கொள்ளப்படும். சம்பந்தர் காலத்திலே துருவம் பெற்று நின்ற நட்சத்திரம் கார்த்திகை. கார்த்திகை முதற்கொண்டு ஒன்பதாம் நட் சத்திரம் பூரம். ஒன்று = கார்த்திகை. ஒன்றொடேழு = எட் டாம் நட்சத்திரம் மகம் . ஏழு = ஏழாம் நட்சத்திரம் ஆயி லியம். பதினெட்டு = பதினெட்டாம்நட்சத்திரம் பூராடம்.