பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு. பதினெட்டொ டாறு = பதினெட்டாம் நட்சத்திரம் முதல் ஆறாம் நட்சத்திரம் பூரட்டாதி. உடனாய நாள்கள் = இவை யோடு மற்றைய ஆறும் என்றவாறு. அது நிற்க, இப் போது துருவம் பெற்றிருக்கும் நட்சத்திரம் உத்தரட் டாதி. கார்த்திகைக்கும் உத்தரட்டாதிக்கும் இடையே யுள்ள பரணி அச்சுவினி ரேவதி என்னும் மூன்றுங் கடக் கப்பட்டன. ஒரு நட்சத்திரத்துக்குத் தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷமாக மூன்றுக்குஞ் சென்ற வருஷத் தொகை இரண்டாயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நாலு. சம்பந்தர் காலத்திலே கார்த்திகையிலே சென்றன போக எஞ்சி நின்ற வருஷங்கள் ஐஞ்ஞூறாக இப்போது உத்தரட்டாதியிற் சென்றவருஷம் ஐஞ்ஞூற்றுக்கு மேலா யின. ஆகவே சம்பந்தர் காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ள தாக நிச்சயிக்கப்படும். திருநாவுக்கரசர் சம்பந்தருக்கு உத்தமநட்பினராய் விளங்கினவ ரென்பது பெரிய புராணமுந் தேவாரமுங் கூறுமாற்றால் வெளிப்படை இருவரும் தத்தம் தேவா ரத்திலே அர்ச்சுனனுக்குச் சிவன் புரிந்த திருவருட்டி றத்தை இடையிடையே எடுத்துத் துதித்துப்போவது, அவர்கள் காலத்துக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே விளங்கிய அர்ச்சுனனுக்குச் சிவன் வேடவடிவங்கொண் டெழுந்தருளிச்சென்று அருள் புரிந்த பேரற்புத நிகழ்ச் சியை உலகம் கன்ன பரம்பரையாக மறக்காமல் எடுத்துப் பாராட்டி வந்த சமீபகாலமேயாதல் பற்றியாம். பாரத யுத்தம் முடிந்த காலம் கலியுகாரம்பம். கலியுகத்திலிப் போது சென்ற து ரு000 வருஷம். பாண்டவர்க்குத் துணை யா யிருந்து போர் செய்த சோழனுக்குப் பின் முடி சூடியவன் நாகலோகஞ்சென்ற சோழன். அவனுக்குப் பின் முடிசூடி அரசு புரிந்தவர் கோச்செங்கட்சோழரென் பது, கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியத்துப் பதி