பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தென்மொழி வரலாறு. பெருக்கெடுத்து வண்டோலஞ் செய்யுங் காழிப் பிள்ளையார் சம்பந்தப் பெருமான் கேளீர் அருட்குலவு மயிலை தனி லனலால் வெந்த வங்கத்தைப் பூம்பாவை யாக்கி னோமென் றிருக்குமது தகவன்று நிலவால் வெந்த விவளையுமோர் பெண்ணாக்க லியல்பு தானே என்னும் பாடலைச் சொற்றன ரென்றொரு கர்ணபரம்ப ரைக்கதை யுண்மையாலும், திருஞானசம்பந்தரைப் போ லவே திருமங்கையாழ்வாரும் சமண சமய கண்டன் செய்து வைதிக சமயஸ்தாபனஞ் செய்யத் திருவவதாரஞ் செய்தாரெனக் கூறப்படுதலாலும், திருமொழியிலே கூறப்படும் பல்லவன் முதலிய அரசர்கள் தேவாரத்திலுங் கூறப்படு தலாலும், இருவரும் ஏககாலத்தவர்களென்ப தற்கையமில்லை. இதனாலும் திருஞானசம்பந்தர் நாலா யிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்பது நன்குநாட் டப்பட்டதாயிற்று. இனித் திருஞானசம்பந்தராலே சுரநோய் தீர்த்தரு ளப்பட்ட கூன்பாண்டியன் காலத்தை நிச்சயிப்பாம். கூன் பாண்டியன் முடத்திருமாறன் எனவும்படுவன். அவன் இடைச்சங்கத் திறுதியிலும், கடைச்சங்கத்துத் தொடக்கத்திலு மிருந்தவனென்பது வடுவறுகாட்சி நடு வட்சங்கத்து ....................... வெண்டேர்ச் செழியன் முதலா விறல்கெழு, திண்டேர்க்கொற்றமுடத்திருமாறன் என வும் பருங்கடைச்சங்கமிருந்தோர்யாரெனில்................... இடர்ப்படா திவர்களைச் சங்கமிரீ இனார், முடத்திருமாறன் முதலாவுக்கிரப் பெருவழுதியீறாப்பிறங்குபாண்டியர்கள் என வும் வரும் ஆன்றோரா சிரியப்பாக்கூற்றாற் பெறப்படும். கூன் பாண்டியன் முதல் உக்கிரப்பெருவழுதி யீறாகச் சென்ற காலம் எண்ணூற்கேள்வியரிருந்த தாயிரத்துத் - தொளாயிரத்தைம்பது வருடமென்ப என மேலே கூறப்