பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. பட்ட ஆசிரியப்பாவினுள்ளே வருவதனால் ஆயிரத்துத் தொளாயிரத்தைம்பது வருடங்களென்பது வெளிப்படை. உக்கிரப்பெருவழுதிமுதல் துலுக்கரால் வெல்லப்பட்ட பராக்கிரமபாண்டியனீறாக நாற்பத்து நான்கு பாண்டியர் கள் வழிவழியா சுபுரிந்தனர். ஒருபாண்டியனுக்கு முப் பது வருஷமா கக் கொள்ளின் நாற்பத்து நால்வர்க்கும் ஆயிரத்து முந் நூற்றிருபது வருஷமா கும். பராக்கிரம பாண்டியனைத் துலுக்கர் வென்று அரசு கைக்கொ ண் டது இற்றைக்கு எண்ணூறு வருஷங்களுக்கு முன்ன ரென்பது இந்திய சரித்திரத்தானினிது விளங்கும். இம் மூன்று தொகையும் நாலாயிரத்தெழுபதாகும் ஆகவே கூன்பாண்டியன் காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன் னுள்ளதென்பது நன்றாகத் துணியப்படும். இனித் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப்பாக்களின் து இயல்பாலும் அவ ருடைய காலத்தை நிச்சயிப்பாம் இக்காலத்தில் இயற்றமிழொன்றுமே வழங்கி வரு கின்றது. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயுள்ள கடைச்சங்க காலத்திலே இயல் இசை நாடகமென்னும் முத்தமிழும் வழங்கிவந்தனவென்பது கடைச்சங்கத்து நூல்களால் நிச்சயிக்கப்படும். ஆயினும் இடைச்சங்க காலத்தில் வழங்கிவந்த அத் துணையாகக் கடைச்சங்க காலத்தில் இசைத் தமிழ் வழங்கிய தன் று. இற்றைக்கு ஆயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்னிருந்த சிலப்பதிகாரவுரையாசிரியரும் தம்முடைய காலத்துக்கு முன்னே இசை நா லும் நாடக நூலும் அழிந்தொழிந் தன வென்பர். இசைத்தமிழிலக்கண நூல்களும் இலக்கியங்களும் இடைச்சங்க காலத்திலேயே மலிந்து கிடந்தன. அவ்வி