பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தென்மொழிவரலாம். டைச்சங்கத் து இயற்றமிழ் நூல்களுள் ளே தொல்காப் பியமொன்றுமே இன்று வரையும் நின்று நிலவுகின்றது. மற்றை இயற்றமிழ் இசைத்தமிழ் நூல்களெல்லாம், சில கடைச்சங்க காலத்திலும், பல அதற்கு முன்னுமாக அழிந்தொழிந்தன. திருஞான சம்பந்தர் செய்தருளிய தேவாரங்க ளுள்ளே சிலபாக்கள் இயற்றமிழ் யாப்பின் வேறுபடுவன. அவற்றுட் சிலவற்றை இயற்றமிழ் யாப்பிலே அடக்கு வது கூடுமா யினும், யாழ்முரி முதலிய சிலவற்றை அடக் குதல் கூடாது. இலக்கண வரம்பு கடந்தனவோவெனில், அன்ன வுமன்று. பின்னர் அவைகளுக்கு இலக்கண நூல் யாதெனில் அவை இசையிலக்கண நூலமைதியுடையன வெனக் கொள்ளல் வேண்டும் அவை தேவபாணியாகா வோவெனில் அவை தேவபாணிக்கின மாவதன்றி அது வாகா. தேவபாணி இயற்றமிழுக்குரியது. தேவாரம் இசைத் தமிழுக்குரியது என்பது சிலப்பதிகாரத்துக் கட லாடுகாதையு ரையிலே "இசைத் தமிழின்வருங்கால் முக நிலைகொச்சகம் முரியென்பன என வருவதனாலும் பிற வற்றாலும் பெறப்படும். தேவபாணியைப் பண்ணிசை யறியாதாருமோதுவர். தேவாரத்தைப் பண்ணிசையறியாதா ரோ தல் கூடாது. ஆதலின் தேவாரம் இசை நுணுக்கமுதலிய விசைத் தமி ழிலக்கணத்துக்கியையப் பாடியருளப்பட்டதாம். இனி அத்தேவாரம் எக்காலத்திற் செய்யப்பட்ட தென நிதானிப்பாம் கடைச்சங்கத்தார் தமிழாராய்ந்தது அகத்தியமுந் தொல்காப்பியமுங் கொண்டேயாம் இடைச்சங்கத்தார் தமிழாராய்ந்தது அகத்தியம் தொல் காப்பியம் மாபுராணம் பூத புராணம் இசை நுணுக்கம் என்னும் நூல்களைக் கொண்டேயாம். இவ்வுண்மை