பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தென்மொழிவரலாறு. திருநாவுக்கரசுநாயனார் தேவாரம். திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூரிலே வேளா ளர் குலத்திலே புகழனாரென் பவர்க்கு மாதினியார் வயிற் றிலே பிறந்தவர். அவர் பிள்ளைத்திருநாமம் மருணீக்கி யார். அவர் பல கலைகளையுங் கற்று நல்லொழுக்கமும் தருமப்பிரியமும் உடையராகி ஒழுகிவருநாளிற் பிரபஞ்ச வாழ்வு அநித்தியமெனக்கண்டு துறவறத்தையடைந்து சமண சமயத்திற் பிரவேசித்து, அச்சமய நூல்களெல் லா வற்றையும் கிராமமா கக் கற்று அவைகளிலும் மகா ப ண்டிதராகிச் சமணாசாரியராற் றருமசேன ரென்னும் பெயர்பெற்று அவருள் ளே அதிசிரேஷ்டராய் விளங்கி வருநாளில், அவர் வயிற்றிலே கொடிய சூலைநோயுண் டாகி வருத்த, சமணாசாரியர்கள் தமது மந்திரவித்தை களையெல்லாம் பிரயோகித்தும், அதனால் அந்நோய் சிறி துந் தணியாது முன்னை யிலுமதிக்கப்பட, அதனைக் கேள் வியுற்ற அவர் சகோதரியாராகிய திலகவதியார், அவ ரைத் தம்மிடம் வருமாறு செய்து, அவருக்குப் பஞ்சாட் சரோபதேசஞ்செய்து அவருடைய சூலைநோயை நீக்க, அவர் இது பரமசிவனுடைய திருவருளெனக்கொண்டு சைவசமயப் பிரவேசஞ்செய்து சிவபக்தியிற் சிறந்தவ ராகி வீரட்டானே சுரரை யடைந்து, அவர் சந்நிதானத் திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, அற்புத மய மாகிய தமிழ்ச்செய்யுள் பாடுஞ் சக்தியுடையராகி, அத்தி யற்புதமாகிய தேவாரங்களைப் பாடித் திருநாவுக்கரசு என்னும் பெயர் சிவனாலளிக்கப்பெற்றவர். அதனை அறி ந்து சமணர்கள் அரசாணை கொண்டு அவரைக் கல் லோடு சேர்த்துக் கட்டிக் கடலிலிட்டுப் போனபோது அக்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறியதும், நீற் றறையிலிட்டபோது சாவாது பிழைத்திருந்ததும், விஷ மூட்டியபோது அதனாலிறவா திருந்ததும், பிறவுமாகிய B) 2.