பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 59 திலொட்டிக் காலநிச்சயம்பண்ணுதல் சிறிதும் பொருத்த முடையதன்று. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அருளிச் செய்த திருப்பதிகத்தொகை பதினாறாயிரம். அவற்றுள் அழிந் தனபோக இப்போதுள்ளன முந்நூற்றெண்பத்து நான்கு. இவர் பாடிய முதற்பதிகம், சீர்காழியிலே சிவாலயத்தி னுள்ளே யிருக்கின்ற தீர்த்தக் கரையிலே தந்தையார் இவரை இருத்திவிட்டுத் தீர்த்தத்திலே சங்கற்பஞ் செய் யப்போனபோது, சிறிது நேரஞ் சென்றபின் தந்தையா ரைக் காணாது அம்மே! அப்பா! என்று அழ, சுவாமி பார்வதி தேவியாரோடு இடபாரூடராய் எழுந்தருளித் தேவியாரைக்கொண்டு பொற்கிண்ணத்தில் திருமுலைப் பாலூட்டி அழுகை தீர்த்து, மறையும் சமையத்தில் தந்தை மீண்டுவந்து யார் தந்த பாலை யுண்டா யென்று உறுக்க, அதற்கு உத்தரமாக, 'தோடுடைய செவியன்விடையேறி யோர் தூவெண் மதிசூடி காடுடையசுடலைப்பொடி பூசி யென் னுள்ளங்கவர்கள்வன் எடுடையமலரான்முனை நாட் பணிந்தேத்தவருள் செய்க பாடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே என்பதை முதலா கடையது. இவருடைய பதிகங் களிலே பறப்பை, கொட்டம், சோடை, காயம், பச்சம், படக்கர் இவை முதலிய அருஞ்சொற்கள் னே கம் காணப் படும். இவ்வருஞ் சொற்களையெல்லாம் தேடித் தேவார நிகண்டென ஒன்று செய்வது பரோபகாரமாகும்.